Viral Video : பணியின்போது சினிமா பாடலுக்கு டான்ஸ்.. வைரலான வீடியோ..சஸ்பெண்ட் செய்யப்பட்ட மகளிர் காவலர்கள்..
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில், சினிமா பாடலுக்கு நடனம் ஆடிய பெண் போலீசார் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில் வளாகத்தில் பணியில் இருந்த நான்கு பெண் போலீசார், சினிமா பாடலுக்கு நடனம் ஆடியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்த கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்னார். இந்த கோயில் 110 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரமாண்ட கோயில் கட்டுமான பணிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்த செல்வது வழக்கமான ஒன்று. கோயில் வளாகத்தில் பிரத்தேய பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இந்த கோயிலானது 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்கள் வழிபாட்டிற்கு திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
வைரலான வீடியோ
#Ayodhya: महिला सिपाहियों के द्वारा बनाया गया 'पतली कमरिया तोरी' पर रील। महिला सिपाहियों का विडियो हुआ वायराल। @ayodhya_police pic.twitter.com/YGn8rlj5cU
— Rahul kumar Vishwakarma (@Rahulku18382624) December 16, 2022
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இங்கு, பாதுகாப்பு பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு பணியில் இருந்த பெண் போலீசார், கவிதா படேல், காமினி குஷ்வாஹா, கஷிஷ் சாஹ்னி, சந்தியாசிங் ஆகிய நான்கு பேரும், ஓய்வு நேரத்தில் சினிமா பாடலுக்கு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியுள்ளனர். ஆனால், அப்போது அவர்கள் சீருடை அணிந்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. நான்கு பேரும் நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
இதையடுத்து, கடந்த வாரம் நான்கு பேரையும் அயோத்தி மாவட்ட எஸ்.பி. முனிராஜ் சஸ்பெண்ட் செய்தார். மேலும், அவர்கள் மீது துறை ரீதியான விசாரணைக்கு ஆஜராகவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வாவ் சூப்பர்...ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளை தத்தெடுப்பது அதிகரிப்பு...மத்திய அரசு தகவல்..!