Morning Headlines: இந்தியாவின் இன்று இதுவரை நடந்தது என்ன? முக்கிய செய்திகள் இதோ!
Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.
- Israel Hamas War: இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்தியா.. ஆப்ரேஷன் அஜய் திட்டம் அறிவிப்பு..
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே நடந்தி வரும் தாக்குதலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்க ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டத்தை இந்திய வெளியுறவுத் துறை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவி தாக்குதலை தொடங்கியது. பல ஆண்டு காலமாக இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இது இஸ்ரேல் தனி நாடாக உருவானதில் இருந்து இந்த பிரச்சனை இருந்து வருகிறது. இஸ்ரேலுடன் பலமுறை போரிட்ட பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் காஸாவை ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த சனிக்கிழமை போர் தொடங்கியது. மேலும் படிக்க
- நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு புது சிக்கல்.. சிபிஐ எடுத்த அடுத்த ஆயுதம்
நியூஸ்கிளிக் இணைய செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி, அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவையும் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தனர். நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி, உபா (சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Rajasthan Election: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் தேதியில் மாற்றம்.. இதான் காரணமா?
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் தற்போது மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 23ஆம் தேதி நடத்தப்படவிருந்த வாக்குப்பதிவு, 25ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த கட்சி, தேர்தலில் வென்றதாக சரித்திரமே இல்லை. பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில், 200 தொகுதிகளில் 100 இடங்களில் வென்ற காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் படிக்க
- Cauvery Water: காவிரி விவகாரம்: தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்றதா ஒழுங்காற்று குழு? கூட்டத்தில் நடந்தது என்ன?
தமிழகத்திற்கு அக்டோபர் 16ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 3,000 கனஅடி நீரை திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. நமக்கான உரிமையையே ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. மேலும் படிக்க
- உள்ளே விட மறுத்த போலீஸ்! சுவர் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ் - முன்னாள் முதலமைச்சருக்கு நடந்தது என்ன?
சுதந்திர போராட்ட வீரரும் சோசலிச தலைவருமான ஜெயபிரகாஷ் நாராயணன், இந்திய அரசியல் வரலாற்றில் மகத்தான பங்காற்றியவர். குறிப்பாக, கடந்த 1970களில் எமர்ஜென்சி காலத்தில், அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஜனதா கட்சியை வெற்றி பெற செய்தார். கடந்த 1979ஆம் ஆண்டு, இவர், இயற்கை எய்தினார். ஜெயபிரகாஷ் நாராயணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொடங்கி மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் வரை பலரும் அவருக்கு இன்று மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் படிக்க