Tarun Tejpal Case verdict | பாலியல் வன்முறை வழக்கு : தெஹல்கா நிறுவனர் தருண் தேஜ்பால் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு!
தெஹல்கா இதழ் 2001-ஆம் ஆண்டு அப்போதைய பாரதிய ஜனதா அரசின் பாதுகாப்பு பேர ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது. இதனால் அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் பங்காரு லஷ்மண் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகியோர் தங்களது பொறுப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பின்னணிதான் தருண் மீதான வழக்குக்கு காரணமாகக் கூறப்பட்டது.
7 வருடப் பழமையான தெஹல்கா பாலியல் வன்முறை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்த இதழின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் குற்றமற்றவர் என கோவா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வழக்கு: என்ன நடந்தது?
கோவாவில் ஆட்சி செய்த பாரதிய ஜனதா அரசு தன்னைப் பழிவாங்க இவ்வாறு செய்வதாகக் கூறிவந்தார் தருண் தேஜ்பால். தெஹல்கா இதழ் 2001-ஆம் ஆண்டு அப்போதைய பாரதிய ஜனதா அரசின் பாதுகாப்பு பேர ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது. இதனால் அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் பங்காரு லஷ்மண் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகியோர் தங்களது பொறுப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பின்னணிதான் தருண் மீதான வழக்குக்கு காரணமாகக் கூறப்பட்டது.
தெஹல்கா இதழின் நிறுவனரும் ஆசிரியருமான தருண் தேஜ்பால் நவம்பர் 2013-ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் நிகழ்வு ஒன்றில் தனது கீழ் பணியாற்றிய பெண்ணிடம் இரண்டு முறை பாலியல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட பெண் அந்த இதழின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான ஷோமா சவுத்ரிக்கு இதுதொடர்பாக புகார் மெயில் ஒன்றை அனுப்பினார். புகார் பெறப்பட்ட அடுத்த நாளே தருணிடமிருந்து அந்தப் பெண்ணுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் சென்றது. அதில்,’சூழலைத் தவறாகப் புரிந்துகொண்டதால் நான் இரண்டுமுறை அவ்வாறு நடந்துகொண்டுவிட்டேன். இந்த வெட்கப்படத்தக்க செயலைச் செய்ததற்கு என்னை மன்னிக்கவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்,’தேஜ்பாலின் மன்னிப்புக் கடிதம் உண்மையில் நிகழ்ந்ததை மறைக்கிறது. உடனடியாக நிறுவனம் விசாகா கமிட்டியின் கீழ் இதுதொடர்பான விசாரணையை நடத்தவேண்டும்’ எனக் கேட்டுக்கொண்டார். கோவா நீதிமன்றம் தானாகவே முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. அப்போது கோவாவில் ஆட்சி செய்த பாரதிய ஜனதா அரசு தன்னைப் பழிவாங்க இவ்வாறு செய்வதாகக் கூறிவந்தார் தருண் தேஜ்பால். தெஹல்கா இதழ் 2001-ஆம் ஆண்டு அப்போதைய பாரதிய ஜனதா அரசின் பாதுகாப்பு பேர ஊழல்களை வெளிக்கொண்டுவந்தது. இதனால் அப்போதைய பாரதிய ஜனதா தலைவர் பங்காரு லஷ்மண் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் ஆகியோர் தங்களது பொறுப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இந்தப் பின்னணிதான் தருண் மீதான வழக்குக்கு காரணமாகக் கூறப்பட்டது. உள்ளூர் நீதிமன்றம் அவருக்கான முன் ஜாமீனை மறுத்த நிலையில் 30 நவம்பர் 2013 அன்று தருண் கைதுசெய்யப்பட்டார். அதற்கு ஒருவருடம் கழித்து உச்சநீதிமன்றம் அவருக்குச் சாதாரண ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கோவா குற்றவியல் பிரிவு போலீசார் இந்த வழக்கில் 2840 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.
2019-ஆம் ஆண்டு தருண் தேஜ்பால் தன் மீதான இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யும்படி உச்சநீதிமன்றத்தைக் கோரிய நிலையில், ‘ஒழுக்க ரீதியாக வெறுக்கத்தக்க குற்றத்தைச் செய்துள்ளீர்கள் நிச்சயம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யமுடியாது’ என பதிலளித்தது.மேலும் வழக்கை விரைந்து முடிக்கும்படி கோவா நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் வழக்கின் ஒட்டுமொத்த விசாரணையின் கடந்த மார்ச் மாதம் முடிந்தது. இதையடுத்து தற்போது இதில் அவர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்துள்ளது கோவா நீதிமன்றம்.
Also Read: ராஜீவ் காந்தியும் ஆளுமையும்- நினைவு நாள் நினைவலைகள் !