மேலும் அறிய

எங்கேயோ போன டெக்னாலஜி! தெலங்கானாவில் 3டி பிரிண்டிங்கில் உருவான உலகின் முதல் கோயில்… என்ன ஸ்பெஷல்!

கோயிலின் கோபுரத்தை, குழு தினமும் 6 மணிநேரம் வேலை செய்து, பத்து நாட்களில் கோயில் கோபுரத்தை பிரிண்ட் செய்து முடித்ததாக கூறப்படுகிறது.

உலகில் முதன்முதலாக, 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட இந்து கோவிலைப் பெற தெலங்கானா மாநிலம் தயாராக உள்ளது. இந்த கோயில் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட அப்சுஜா இன்ஃப்ராடெக் மூலம் 3,800 சதுர அடி பரப்பளவில் மூன்று பகுதிகளாக உருவாகியுள்ளது. 

உலகின் முதல் 3டி பிரிண்டிங் கோயில்

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்பமாக 3டி பிரிண்டிங் தொழில்நுட்பம் வளரும் என்று 10 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்நுட்ப வல்லுனர்கள் கணித்தது இன்று உண்மையாகிக் கொண்டிருக்கிறது. முழு கட்டுமானங்களையும் பிரிண்டிங் மூலமாக பிரதி எடுப்பது போல எடுத்துவிடலாம் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயமாக இருந்தாலும் அதனை சாத்தியம் ஆக்கி உள்ளது தொழில்நுட்பம். இது எதிர்காலத்தில் எல்லோர் வீட்டிலும் இருக்கப்போகும் மெஷினாக மாறும் என்று பலரும் கணிக்கும் இந்த நேரத்தில், அந்த தொழில்நுட்பத்தில் கட்டப்படும் முதல் கோயிலாக இன்று தெலங்கானாவில் உருவாகி இருப்பது அதன் அடுத்த கட்டம் எனலாம். சித்திப்பேட்டையில் உள்ள புருகுபள்ளியில், ஒரு பாதுகாப்பு மேம்படுத்தப்பட்ட வில்லா கம்யூனிட்டியான, சார்விதா மேடோவ்ஸ்-இல் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த திட்டத்திற்காக, 3டி அச்சு மூலம் வீடு கட்டும், கட்டுமான நிறுவனமான சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ், அப்சுஜா இன்ஃப்ராடெக் உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

எங்கேயோ போன டெக்னாலஜி! தெலங்கானாவில் 3டி பிரிண்டிங்கில் உருவான உலகின் முதல் கோயில்… என்ன ஸ்பெஷல்!

3டி பிரிண்டிங் என்றால் என்ன?

3டி பிரிண்டிங் என்பது, நாம் எப்படி கம்ப்யூட்டரில், எழுத்தையோ, புகைப்படத்தையோ 2டி-இல் பிரிண்ட் செய்கிறோமோ அதே போல டிசைனை உள்ளிட்டால் அதனை அப்படியே பொருளாக உருவாக்கி தருவதுதான் 3டி பிரிண்டிங். இதிலுள்ள இரண்டு கடினமான விஷயம் உள்ளிடும் 3டி டிசைன் மற்றும் அதனை உருவாக்க பயன்படும் ஃபிளமெண்ட் தான். இது இரண்டுமே காலப்போக்கில் எளிதாக மாறும்போது இது அனைவரும் பயன்படுத்தும் வகையில் வரும்.  "கட்டுமானத்திற்குள் உள்ள மூன்று கருவறைகள், விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவாலயம், சங்கரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சதுர உறைவிடம்; மற்றும் பார்வதி தேவிக்கான தாமரை வடிவ இல்லம்," என்று அப்சுஜா இன்ஃப்ராடெக்-இன் மேனேஜிங் டைரக்டர், ஹரி கிருஷ்ணா ஜீடிப்பள்ளி, கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்: Maamannan Audio Launch Vadivelu Speech: இனி அரசியலில் உதயநிதி ஹீரோ.. என்னை ரஹ்மான் பாடவைத்தார்... வடிவேலு அதிரடி..

2 மணி நேரத்தில் கட்டிமுடிக்கப்பட்ட பாலம்

இந்தியாவில் முதல் முன்மாதிரி பாலம் ஒன்றை சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸ் மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் சேர்ந்து, ஹைதராபாத்தில் மார்ச் மாதம் வெறும் இரண்டு மணி நேரத்திற்குள் கட்டி முடித்தது குறிப்பிடத்தக்கது. "இதுவும் சித்திப்பேட்டை சார்விதா மேடோவ்ஸ்-இல் உள்ள தளத்தில் கட்டியது. ஐஐடி ஹைதராபாத் சிவில் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த பேராசிரியர் கே.வி.எல் சுப்ரமணியம் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவால் கருத்து மற்றும் வடிவமைப்பு உருவாக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. சுமை தாங்கும் சோதனை மற்றும் பயன்பாட்டிற்கான மதிப்பீட்டிற்குப் பிறகு, இது இப்போது கோயிலைச் சுற்றியுள்ள தோட்டத்தில் நடைபாதை பாலமாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று சிம்ப்ளிஃபோர்ஜ் கிரியேஷன்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி துருவ் காந்தி கூறினார்.

எங்கேயோ போன டெக்னாலஜி! தெலங்கானாவில் 3டி பிரிண்டிங்கில் உருவான உலகின் முதல் கோயில்… என்ன ஸ்பெஷல்!

கோயில் கோபுரம்

கடினமாக இருந்தபோதிலும், கோயிலின் கோபுரத்தை, குழு தினமும் 6 மணிநேரம் வேலை செய்து, பத்து நாட்களில் கோயில் கோபுரத்தை பிரிண்ட் செய்து முடித்தது. "கோபுரத்தில் தாமரை மொட்டு வடிவத்தை கொண்டு வர முயற்சித்துள்ளோம்" என்று காந்தி கூறினார். "ஆனால், மரபுவழி உத்திகளைக் கொண்டு அடைய முடியாத வடிவங்களை 3டி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எளிதாகச் செய்ய முடியும் என்பதை நாங்கள் ஏற்கனவே எங்களின் விநாயகர் கோவிலின் மூலம் நிரூபித்துள்ளோம். கட்டுமானத் துறைக்கு 3டி பிரிண்டிங் வழங்கும் அளப்பரிய பங்கை, இப்போது உச்சியில் இருக்கும் தாமரை வடிவ கோபுரம் மீண்டும் உலகுக்கு நிரூபிக்கும்" என்று காந்தி மேலும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cylinder Blast : திடீரென வெடித்த சிலிண்டர் உயிருக்கு போராடும் 7 பேர் பதறவைக்கும் CCTV காட்சிTrichy Flight Landed : 2 மணி நேரம் போராட்டம் தரையிறங்கிய விமானம் SMART-ஆக செயல்பட்ட விமானிகள்Mohammed Siraj : DSP அவதாரம் எடுத்த சிராஜ்! கெத்து காட்டும் கிரிக்கெட் வீரர்! இனி ரவுடிகள் ஜாக்கிரதைPTR on Trichy flight landing :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
தவெகவின் முதல் மாநாடு.. ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்த விஜய்.. யாரெல்லாம் இருக்காங்க பாருங்க!
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
யூடியூபர் சவுக்கு சங்கர் திடீரென மருத்துவமனையில் அனுமதி! - என்னாச்சு?
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
கலைஞர் பூங்காவில் ரிப்பேர் ஆன ஜிப் லைன்.. 20 நிமிடங்களாக சிக்கி தவித்த பெண்கள்.. திக் திக்!
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
தேதி குறித்த பிரதமர் மோடி.. 17ஆம் தேதி பதவியேற்கும் முதலமைச்சர்.. ஹரியானாவில் பாஜக 3.0
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
பூந்தமல்லியில் அதிர்ச்சி... சிலிண்டர் வெடித்து நொறுங்கிய வீடு; 7 பேர் காயம்
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
Video: குழிக்குள் விழுந்த யானை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் மீட்பு: குவியும் பாராட்டுகள்.!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
விண்ணப்பித்து விட்டீர்களா? அரசு வேலைக்கு சட்டம் படித்தவர்கள் விண்ணப்பிக்க இன்றே கடைசி!
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Rohit Sharma:மீண்டும் தந்தையாகும் ரோஹித் ஷர்மா;ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகினால் யார் கேப்டன்?
Embed widget