Mount Everest: 'தமிழன்டா..' எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய தமிழன்..! யார் இந்த குட்டி?
யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால், கனவை நிஜமாக்க தேவைப்படும் உழைப்பும், உறுதியும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும்.
இயற்கையின் படைப்பில் என்றுமே சலிக்காத இரண்டு விஷயங்கள் கடலும், மலையும். இரண்டுமே அதன் அசாதாரணத்திற்காகவே நம்மை மிகவும் ஆச்சர்யப்பட வைக்கும். அப்படி கடலின் ஆழத்தையும், மலையின் உச்சியையும் ஒரு சேர வென்றெடுத்த ஒரு சாதனைத் தமிழன் குறித்த அறிமுகம் தான் இது.
ஆளப்போறான் தமிழன்:
தமிழ்நாட்டின் கடலோர கிராமத்தில் பிறந்து, எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடியை நாட்டியவர் ராஜசேகர் (எ) குட்டி. எவரெஸ்ட் சிகரம் மலையேற்ற வீரர்கள் மட்டுமில்லாமல், சாதாரண மனிதர்களுக்கும் அந்த சிகரத்தை அடைவது ஒரு கனவு. யார் வேண்டுமானாலும் கனவு காணலாம். ஆனால், கனவை நிஜமாக்க தேவைப்படும் உழைப்பும், உறுதியும் ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அப்படி ஒரு மனிதர்தான் குட்டி.
தமிழ்நாட்டின் மீனவ கடற்கரை கிராமத்தின் 27 வயது இளைஞர்தான் குட்டி. அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர். பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரென மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டது.
கனவை நிஜமாக்கிய ஹீரோ:
ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சிகள் எடுத்து, 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார்படுத்திக்கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி குளிரைத் தாங்க மணாலி, சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்ட குட்டி, ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் மலையின் Base Campல் பயணத்தை தொடங்கி, 8850 மீட்டர் உயரத்தை மே 19ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு அடைந்து தனது கனவை நிஜமாக்கினார்.
இந்த பயணத்தில் ஏகப்பட்ட தடைகள், தட்பவெப்ப சூழ்நிலைகள், மன உறுதியைக் குலைக்கும் சம்பவங்கள் என பலவற்றைத் தாண்டி வெற்றியை அடைந்துள்ளார். இதில் மிக முக்கியமானது தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழர் ஒருவர் அடைந்த வெற்றி என்பதே.
Kyn செயலி:
குட்டியின் இந்த கனவுக்கு ஸ்பான்ஸர் Kyn Powered by PRO. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமான Hyper Local என்னும் கான்செப்ட்டில் உருவாகியுள்ளது இந்த Kyn செயலி. நம் உள்ளூர் கதாநாயகர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேலும் ஊக்குவித்து, கொண்டாட வருகிறது Kyn செயலி.
அந்த வகையில், குட்டி, தன்னுடைய கனவை அடைய Kyn நிறுவனம் உதவி செய்துள்ளது. இதற்கு முன்பு, நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருந்தார். இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் இரண்டாம் படைப்பிரிவில் ஹவில்தாராக பணியாற்றி வரும் சிவகுமார் கடந்த 2016ஆம் ஆண்டு, இந்த சாதனையை படைத்திருந்தார்.