Breaking News Live: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கட்சிகளுடன் ஆலோசனை..
இன்றைய முக்கிய அரசியல், சமூக, நிகழ்வுகளை இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
டெல்லி குடியரசு தின விழாவில் நிராகரிக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின விழாவில் இடம்பெறுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி பயணப்படும் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் மாநிலங்கள் சார்பாகவும், மத்திய அரசின் துறைகள் சார்பாகவும் நடைபெறும் அலங்கார ஊர்தி அணிவகுப்பானது. இந்த ஆண்டு
‘இந்தியா 75' என்ற தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் இடம்பெற வேண்டி விடுதலைப்போரில் தமிழகத்தின் பங்களிப்பைப் பறை சாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்காண வடிவமைப்பு மாதிரிகள் மத்திய அரசின் தேர்வுக் குழுவின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, மூன்று முறை அவர்கள் கூறிய திருத்தங்களைச் செய்தோம். நான்காவது கூட்டத்திற்கு எந்தவொரு காரணமுமின்றி அழைக்காமல், அது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்துவிட்டு, தற்போது நிராகரிக்கப்பட்டிருப்பது குறித்த வருத்தத்தை நேற்று பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தேன். இன்று கிடைக்கப்பெற்ற மாண்புமிரு ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில் எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கட்சிகளுடன் ஆலோசனை..
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : கட்சிகளுடன் ஆலோசனை. கொரோனா பரவல் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என ஆலோசிக்கப்படுவருகிறது
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை
10 மற்றும் 12 வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்த வேண்டும் அரசு பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை