மேலும் அறிய

RTI : ஆர்டிஐ சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க மறுக்கும் மாநிலங்கள்.. பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடம்...!

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

அரசு நிர்வாகம் பற்றி பலதரப்பட்ட தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்தது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில்களை மறுக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கேட்கப்பட்ட கேள்விகளில் 14 சதவிக கேள்விகளுக்கு மட்டுமே தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. 

அடுத்தபடியாக, மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தில். 23 சதவிகித கேள்விகளுக்கு மட்டும் மகாராஷ்டிரா மாநில தகவல் ஆணையம் பதில் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட் கார்டினை சதார்க் நாக்ரிக் சங்கதன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

10 தகவல் ஆணையங்கள் மட்டுமே முழு தகவல்களையும் வழங்கியுள்ளன என 2021-22 ஆண்டுக்கான பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம், ஹரியாணா, ஜார்க்கண்ட் மற்றும் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்கள் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ளது.

தகவல் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள சதார்க் நாக்ரிக் சங்கதன் அமைப்பு, "ஒரே மாதிரியான தகவல்களைக் கோரி மொத்தம் 145 ஆர்டிஐ விண்ணப்பங்கள் 29 தகவல் ஆணையங்களில் தாக்கல் செய்யப்பட்டன. 

தகவல்களை தெரியப்படுத்துவதில் ஒரு அரசு அமைப்பாக தகவல் ஆணையம் எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ விண்ணப்பங்கள் கண்காணிக்கப்பட்டன. தகவல் ஆணையத்திற்கு வந்த புகார்கள், விதிக்கப்பட்ட அபராதம், இழப்பீடு உள்பட கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்த தமிழ்நாடு தகவல் ஆணையம் மோசமாக செயல்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டால், மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை பெற்ற பிறகுதான் தகவல்கள் அளிக்க முடியும் என தமிழ்நாடு தகவல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது” என்று கூறியது. 

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தகவல்களை அளிக்க மாநில சட்டப்பேரவையின் அனுமதி தேவையில்லை. தற்போது அமலில் உள்ள மாநில சட்டத்தை மேற்கோள்காட்டியும் பல்வேறு காரணங்களை சொல்லியும் சத்தீஸ்கர் மாநில தகவல் ஆணையம் தகவல்களை வழங்க மறுத்துள்ளது.

தகவல்களை வழங்காமலேயே ஆர்டிஐ விண்ணப்பங்களை திருப்பி அளிக்கும் சம்பவங்களும் நாடு முழுவதும் உள்ள மாநில தகவல் ஆணையங்களில் நிகழந்துள்ளது.

ஒவ்வொரு ஆணையரும் ஓராண்டில் குறிப்பிட்ட மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மற்றும் புகார்களை தீர்க்க வேண்டும். அதன்படி, 29 தகவல் ஆணையங்களில், தலைமைத் தகவல் ஆணையம் மட்டுமே, அந்த வரம்பை நிறைவேற்றியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
DRAGON Hero Pradeep: சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan: Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Kaliammal: தளபதிக்கே தளபதியாக மாறப்போகும் காளியம்மாள்? தவெக-வில் இணைவது எப்போது?
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Jayalalithaa-Modi: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்த பிரதமர் மோடி.! திறமையானவர், அன்பானவர், கருணையானவர்.!
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
Kaliammal Quits NTK: நாம் தமிழருக்கு குட் பை! கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்! அடுத்து எந்த கட்சி?
DRAGON Hero Pradeep: சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
சார்ர்ர்ர்ர்...உங்க கிட்ட இருந்து எனக்கு கமெண்ட்டா.!! டிராகன் ஹீரோவை வியக்க வைத்த ட்வீட்...
National Award : இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு ? நம்ம போட்டியாளர்கள் இவர்கள்தான்
National Award : இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு ? நம்ம போட்டியாளர்கள் இவர்கள்தான்
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
ரூ.1.94 லட்சம் சம்பளம்; தேர்வில் 0 பேர் தேர்ச்சி- ஒருவருக்குக் கூட தகுதியில்லையா? வெளியான அதிர்ச்சித் தகவல்!
Pakistan Semi Final Chance: காப்பாத்துங்க.. வங்கதேசத்திற்காக வழிபடும் பாகிஸ்தான்.. குறுக்கே வரும் நியூசிலாந்து!
Pakistan Semi Final Chance: காப்பாத்துங்க.. வங்கதேசத்திற்காக வழிபடும் பாகிஸ்தான்.. குறுக்கே வரும் நியூசிலாந்து!
Mudhalvar Marundhagam: அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
அட..முதல்வர் மருந்தகத்துல விலை இவ்ளோ கம்மியா.? இது உண்மையாவே சூப்பர் திட்டம்...
Embed widget