எஸ்.பி.யாக பணியாற்றிய ஒடிசாவிற்கு 27 ஆண்டுகளுக்கு பின் டி.ஜி.பி.யாக திரும்பும் ஐ.பி.எஸ். அதிகாரி!
எஸ்.பி.யாக பணியாற்றிய ஒடிசா மாநிலத்திற்கு, 27 ஆண்டுகளுக்கு பிறகு டி.ஜி.பி.யாக திரும்பும் சுனில்குமார் பன்சாலுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தின் டி.ஜி.பி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி அபய் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, அந்த மாநிலத்தின் புதிய டி.ஜி.பி.யாக சுனில்குமார் பன்சாலை மாநில முதல்வர் நவீன்குமார் பட்நாயக் அறிவித்துள்ளார்.
1987ம் ஆண்டு ஐ.பி.எஸ். பேட்ச் அதிகாரியான சுனில்குமார் பன்சால் உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். ஒடிசாவின் புதிய டி.ஜி.பி.யான சுனில்குமார் பன்சால் ஒடிசா கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ஆனால், அவர் ஒடிசாவிற்காக அதிகாரப்பூர்வமாக காவல் பணியாற்றி 27 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மிகவும் குறுகிய காலகட்டம் மட்டுமே ஒடிசாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். 1994ம் ஆண்டுவரையிலான அவரது பணிக்காலத்தில் ஒடிசா மாநிலத்தில் ஒடிசாவின் தேன்கனலின் கூடுதல் எஸ்.பி.யாகவும், சம்பல்பூரின் எஸ்.பி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், அவர் மயூர்பஞ்ச் எஸ்.பி.யாகவும் பொறுப்பு வகித்துள்ளார். கடைசியாகவோ சம்பல்பூரின் லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக ஒடிசாவில் பொறுப்பு வகித்தவர்.
1994ம் ஆண்டுக்கு பிறகு, மத்திய அரசின் உளவுத்துறை பணிக்கு மாற்றப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் உளவுத்துறையின் சிறப்பு இயக்குனராக சுனில்குமார் பன்சால் நியமிக்கப்பட்டார். சட்டம், ஒழுங்கு, உளவுத்துறை பாதுகாப்பு ஆகியவற்றில் திறம்பட அனுபவம் வாய்ந்தவர் சுனில்குமார் பன்சால். எஸ்.பி.யாக பணியாற்றிய மாநிலத்தில் 27 ஆண்டுகளுக்கு பிறகு டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ள சுனில்குமார் பன்சாலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, சுனில்குமார் பன்சால், பிரதீப்குமார் (1986ம் ஆண்டு பேட்ச்), மனோஜ் சாப்ரா (1988ம் ஆண்டு பேட்ச்) ஆகிய மூன்று பேரும் டி.ஜி.பி. பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு, அவர்களில் சுனில்குமார் பன்சால் டி.ஜி.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க : Pak Break India Record : இந்தியாவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தானின் பாபர் அசாம் - ரிஸ்வான்!
மேலும் படிக்க : Today Headlines : அதிகரிக்கும் ஒமிக்ரான்.. வருண்சிங்கிற்கு அஞ்சலி... மீண்டும் ஸ்மித்... இன்னும் பல செய்திகள்!
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்