மேலும் அறிய
Advertisement
Today Headlines : அதிகரிக்கும் ஒமிக்ரான்.. வருண்சிங்கிற்கு அஞ்சலி... மீண்டும் ஸ்மித்... இன்னும் பல செய்திகள்!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- தமிழ்நாட்டில் 70 புதிய கூட்டுறவு நியாய விலை மருந்தகங்கள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- உதகை அரசுப்பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி நிர்வாகம் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் – அனுமதி அளித்த உதகை ஆட்சியருக்கு கண்டனம்
- தமிழ்நாட்டில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
- பத்திரப்பதிவு துறையில் கடந்த கால ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு அமைப்பு
- பொறியியல் மாணவர்களுக்கு ஜனவரி 21-ந் தேதி நேரடி செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு
இந்தியா:
- பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்வு – நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல்
- இந்தியாவில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 86 ஆக உயர்வு
- கர்நாடகா, டெல்லி, குஜராத்தில் மட்டும் தலா 10 நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
- கேரளாவில் அதிகரிக்கும் பறவைக்காய்ச்சல் – தமிழக எல்லையில் அதிகரிக்கும் சோதனை
- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- பாலியல் புகார் எழுந்ததையடுத்து ராஜினமா செய்தார் கோவா மாநில சமூகநலத்துறை அமைச்சர்
- ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வருண்சிங் உடல் போபாலுக்கு கொண்டு வரப்பட்டது
உலகம் :
- செவ்வாய் கிரகத்தில் பாறைகள் இருப்பது கண்டுபிடிப்பு – நாசா வெளியிட்ட துல்லியமான புகைப்படம் வெளியானது
- ஸ்பெயின் நாட்டில் 90 நாட்களாக சீறி வந்த எரிமலையின் சீற்றம் தணிந்தது
- நியூசிலாந்து நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து பிரமாண்ட பேரணி
- சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் – கனடாவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி தகவல்
விளையாட்டு :
- பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாடச் சென்ற மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் 5 பேருக்கு கொரோனா
- உலக பேட்மிண்டன் போட்டித்தொடரின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
- டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித்தொடரில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றது இந்திய கிரிக்கெட் அணி
- ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டில் கேப்டன் பதவியில் இருந்து பாட் கம்மின்ஸ் விலகல் – மீண்டும் கேப்டனானார் ஸ்டீவ் ஸ்மித்
- இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல் நாளில் 221 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion