மேலும் அறிய

AI-யின் ஆதிக்கம்: Oracle-ன் அதிரடி நடவடிக்கை! 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்? அதிர்ச்சியில் Tech உலகம்!

Oracle நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை மிச்சம் செய்து அதில் AI இலக்குகளை முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறதாம்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை கையாளும் விதமே பெரும் அளவில் மாறிவிட்டது. பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஊழியர்கள் வேலையில் கை வைக்கின்றன.

AI-யின் ஆதிக்கம்: Oracle-ன் அதிரடி நடவடிக்கை! 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்? அதிர்ச்சியில் Tech உலகம்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏராளமான தொழிலாளர்கள் IT நிறுவனங்களில் இருந்து வேலையில் இருந்து நீக்கப்பட்டதை நாம் காண முடிந்தது. இந்தியாவிலேயே கூட TCS நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. இந்த நிலையில் அமெரிக்காவின் பெரிய TECH நிறுவனமான Oracle தங்கள் ஊழியர்களில் 30000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி ஒட்டுமொத்த TECH துறைக்குமே பெரிய அதிர்ச்சியை தந்திருக்கிறது.

இந்த மாதத்திலேயே Oracle ஊழியர்கள் பணி நீக்க அறிவிப்பை வெளியிடும் என்றும் விரைவில் தங்களுடைய நிறுவனத்தையே பெருமளவில் மறு கட்டமைப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது. Oracle நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் வேலை செய்யக்கூடிய ஊழியர்கள் இந்த பணி நீக்கத்தால் பாதிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு மாற்றாக ஏஐ தொழில்நுட்பத்தை பணியில் அமர்த்த Oracle நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம்.

AI-யின் ஆதிக்கம்: Oracle-ன் அதிரடி நடவடிக்கை! 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்? அதிர்ச்சியில் Tech உலகம்!

அண்மையில் தான் இந்த நிறுவனம் தங்களுடைய கிளவுட் பிரிவில் புதிதாக ஊழியர்களை வேலைக்கு பணி அமர்த்துவதை நிறுத்தி வைத்தது. இந்த நிறுவனம் AI பிரிவில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக ஓபன் AI நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தமும் செய்து இருக்கிறது. ஆனால் இது இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய நிதிச் சுமையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. ஏனெனில் பாரம்பரியமான ஒரு டேட்டா பேஸ் சாப்ட்வேர் நிறுவனத்திலிருந்து அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய அளவிலான கிளவுட் நிறுவனமாக மாற வேண்டும் என Oracle நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி லாரி எலிசன் முடிவு செய்திருக்கிறார். இதற்காக இந்த நிறுவனம் AI பிரிவிலும் அது சம்பந்தப்பட்ட டேட்டா சென்டர்கள் மற்றும் அதற்கான தொழில் நுட்பங்களிலும் அதிக முதலீடு செய்து வருகிறது.

Oracle நிறுவனத்தின் AI இலக்குகளை எட்ட 30 லட்சம் ஜிபியூ-கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டும் இல்லாமல் 156 பில்லியன் டாலர்கள் மூலதனம் தேவையாம். அண்மையில் தான் Oracle நிறுவனம் 58 பில்லியன் டாலர்களை கடனாக வாங்கியது. Oracle நிறுவனம் திடீரென AI-இல் மட்டும் கவனம் செலுத்துவதால் அச்சமடைந்து ஏராளமான நிதி நிறுவனங்கள் இதற்கு கடன் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றன. ஏற்கனவே இதன் கடன் அதிகரித்து விட்டது, இப்போது செய்யும் முதலீடுகள் 2030-ம் ஆண்டு வரை லாபம் தராது என்பதால் பல நிறுவனங்களும் கடன் தர மறுத்து வருகின்றன.

AI-யின் ஆதிக்கம்: Oracle-ன் அதிரடி நடவடிக்கை! 30,000 ஊழியர்கள் பணிநீக்கம்? அதிர்ச்சியில் Tech உலகம்!

இதன் காரணமாக Oracle நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துவிட்டு அவர்களுக்கு வழங்கக்கூடிய சம்பளத்தை மிச்சம் செய்து அதில் AI இலக்குகளை முடித்து கொள்ளலாம் என திட்டமிட்டு இருக்கிறதாம். இதன் காரணமாகவே சுமார் 30,000 பேரை வேலையில் இழந்து நீக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அமேசான் நிறுவனம் ஜனவரி மாதத்தில் தான் 16,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது , அதற்கு முன்பு அக்டோபரில் தான் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது.

கடந்த ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 15,000 பேரை வேலையில் இருந்து நீக்கியது. சேல்ஸ் ஃபோர்ஸ், பிளாக் இங்க் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
முதல் இரவில் நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கணவன்.. திருமணம் முடிந்த சில மணி நேரங்களிலேயே நடந்த கொடூரம்
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
லக்குன்னா இப்படி இருக்கணும்; குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட லாட்டரிக்கு 1 கோடி ரூபாய் முதல் பரிசு!
Top 10 News Headlines: வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
வேட்புமனு பரிசீலனை, ஞானேஷ் குமார்-தீர்மானம் நிராகரிப்பு, பாக்.,-ல் பொதுமுடக்கம், ஈரான் நிபந்தனை - 11 மணி செய்திகள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு
US Iran War: ஈரானுக்கு முடியும் கெடு "இன்று இரவு ஒரு நாகரிகமே அழியும்" டிரம்ப் பகீர் மிரட்டல்!
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெகவில் யாரும் போட்டியிடவில்லை - கடைசியில் நேரத்தில் நடந்தது என்ன?
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
"விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலிச்சது கடுப்பா இருந்துச்சு.." மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
Honda Offers: நாங்களும் தருவோம் தள்ளுபடி.! 1.80 லட்சம் ஆஃபர்.. City முதல் Amaze வரை - ஹோண்டா அறிவிப்பு!
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
ICAI Changes: சிஏ மாணவர்களே.. தேர்வில் 2 முக்கிய மாற்றங்களை அறிவித்த ஐசிஏஐ- என்ன தெரியுமா?
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
Akshaya Tritiya 2026: அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
அட்சய திருதியை எப்போது வருகிறது? அன்று தங்கம் வாங்க நல்ல நேரம் என்ன? - முழு விவரம் இதோ
Embed widget