துபாயில் அவசரமாகத் தரையிரங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்: அதிர்ச்சிகரக் காரணம் என்ன?
தரையிரங்கியதற்குப் பிறகான ஆய்வில், மூக்கு சக்கரம் இயல்பை விட அதிகமாக அழுத்தப்பட்டிருப்பதை பொறியாளர்கள் கவனித்தனர்.
ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானம் திங்கள்கிழமை மங்களூருவில் இருந்து துபாய்க்கு சென்ற பிறகு அதன் மூக்கு சக்கரத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரையிறக்கப்பட்டது என்று சிவில் ஏவியேஷன் பொது இயக்குனரக (DGCA) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான நிறுவனம் மாற்று விமானத்தையும் துபாய்க்கு அனுப்பியது.
“தரையிறங்கியதற்குப் பிறகான ஆய்வில், மூக்கு சக்கரம் இயல்பை விட அதிகமாக அழுத்தப்பட்டிருப்பதை பொறியாளர்கள் கவனித்தனர். அப்போதுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டது” என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார்.
“லேண்டிங் கியர் ஸ்ட்ரட்டின் ஆய்வுக்குப் பிறகு, பராமரிப்பு நடைமுறையின்படி நைட்ரஜன் நிரப்பப்பட்டது. வேறு எந்த அசாதாரணங்களும் காணப்படாததால், விமானம் சேவைக்காக விடுவிக்கப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கடைசி நிமிட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தாமதமாக வந்ததாகவும், மாற்று விமானம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். “எந்தவொரு விமான நிறுவனத்திலும் விமான தாமதங்கள் நிகழலாம். இந்த விமானத்தில் எந்தவித அசம்பாவிதமோ, பாதுகாப்பு பயமோ ஏற்படவில்லை. சிறிய தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கப்பட்ட பிறகு, முதல் விமானம் வணிக விமானமாக இந்தியாவுக்கு திரும்பியது” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
View this post on Instagram
இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் கடந்த வாரம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டது. பட்ஜெட் கேரியர் தனது சேவைகளை பாதுகாப்பானது, திறமையானது மற்றும் நம்பகமானது என்பதை நிறுவத் தவறிவிட்டது என்று அதில் கூறியது.
"மோசமான உள் பாதுகாப்பு மேற்பார்வை மற்றும் போதுமான பராமரிப்பு நடவடிக்கைகள் இல்லாமை" என்று கடந்த ஆண்டு நிகழ்ந்த ஒரு மதிப்பாய்வை அது மேற்கோள் காட்டியது.
ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் வான் பாதுகாப்பு சம்பவங்கள் குறித்து புகார் அளித்ததை அடுத்து DGCA இன் அறிவிப்பு வந்தது. ஏப்ரல் 1 முதல் "விமானம் அதன் தொடக்க நிலையத்திற்குத் திரும்பியது அல்லது சீரழிந்த பாதுகாப்பு விளிம்புகளுடன் இலக்குக்குத் தொடர்ந்து பயணித்தது" என்று அந்த மதிப்பாய்வு பல சம்பவங்களைக் கண்டறிந்தது என DGCA கூறியது. மேலும் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு தொடர்பான இந்த அலட்சியப் போக்குக்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை விளக்குமாறும் விமான நிறுவனத்திடம் கேட்டது.