மேலும் அறிய

அய்யய்யோ.. மனைவியை கொலை செய்துவிட்டு உதவி காவல் ஆணையர் தற்கொலை - நடந்தது என்ன?

மகாராஷ்ட்ராவில் உதவி காவல் ஆணையர் மனைவியை சுட்டுக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த சில மாதங்களாகவே காவல்துறை அதிகாரிகள் மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகரித்து வருகிறது. மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது புனே. புனே நகரில் உள்ள பனேர் பகுதியில் வசித்து வந்தவர் பரத் கெய்க்வாட்.

கொலை, தற்கொலை:

இவர் மகாராஷ்ட்ராவில் உள்ள அமராவதி நகரின் உதவி காவல் ஆணையர் ஆவார். இவரது மனைவி மோனி கெய்க்வாட். இவர்களுடன் வீட்டில் இவரது மகன் மற்றும் உறவினர் தீபக் (35) ஆகியோர் தங்கி வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் உதவி காவல் ஆணையர் பரத் தன்னுடைய கைத்துப்பாக்கியால் தன் மனைவி மோனி கெய்க்வாட்டை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

அதிகாலையில் திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது மகன் மற்றும் உறவினர் பரத் அலறியடித்து சத்தம் கேட்ட பரத்தின் அறைக்கு சென்றனர். அங்கு கதவை திறந்து அவர்கள் பார்த்தபோது மோனி கெய்க்வாட் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

காரணம் என்ன?

அதைப்பார்த்து, பரத்தின் மகனும், அவரது உறவினருமான தீபக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களை கண்ட பரத் அவர்களையும் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரது உறவினர் தீபக்கின் மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதனால், அவர் ரத்த வெள்ளத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், சட்டென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 3 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 57 வயதான காவல் அதிகாரியான பரத் கெய்க்வாட் துப்பாக்கியால் சுட்டு தன்னுடைய மனைவி மற்றும் உறவினரை கொலை செய்தது ஏன்? தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பரத்கெய்க்வாட்டின் இந்த செயலுக்கு மன அழுத்தம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் உயர் அதிகாரியே மனைவி மற்றும் உறவினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், சென்னையில் காவலர் அருண்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்க: Crime: திண்டுக்கல் அருகே பயங்கரம்; வெட்டி முகத்தை சிதைத்து ரவுடி கொடூர கொலை

மேலும் படிக்க: ரொம்ப அசிங்கமா போச்சி குமாரு! திருட வந்த வீட்டில் எதுவும் சிக்காததால் ரூ. 500 நோட்டை போட்டுச் சென்ற திருடர்கள்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget