Rajya Sabha : கனிமொழி என்.வி.என் சோமு உட்பட திமுக மாநிலங்களவை எம்பிக்கள் சஸ்பெண்ட்.. மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!
மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் இருந்து திமுக எம்பிக்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கனிமொழி எவிஎன் சோமு, சண்முகம், என்.ஆர், இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை திமுக எம்பிக்களான 5 பேர் மற்றும் எம்பிக்கள் சுஷ்மிதா டேவ், டோலாசென் உள்பட 6 பேரை சேர்த்து மொத்தம் 11 பேரை இந்த வார மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், லோக்சபாவும், மாநிலங்களவையும் ஜூலை 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. பணவீக்கம், ஜிஎஸ்டி விலை உயர்வு, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே இரு அவைகளும் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டன.
திங்களன்று, இடையூறு விளைவித்ததற்காக நான்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். மாணிக்கம் தாகூர், டிஎன் பிரதாபன், ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கையை "ஜனநாயகத்தின் கறை" என்று ஆவேசமடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் என்று குரல் கொடுத்தனர்.
கடந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி, நாட்டில் பணவீக்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியதால், இரு அவைகளும் அடிக்கடி ஒத்திவைக்கப்பட்டன.
இன்று காலை ராஜ்ய சபா தொடங்கியதும் "ஜிஎஸ்டி திரும்பப் பெறு", "மோடி டவுன் டவுன்" போன்ற கோஷங்களை எழுப்பிய கூட்டு எதிர்க்கட்சியினரின் கூச்சலுக்கு மத்தியில் கேள்வி நேரம் நடத்தப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒத்தி வைக்கப்பட்ட ராஜ்யசபா பிற்பகல் 2 மணிக்கு, பேரழிவு ஆயுதங்கள் மற்றும் அவற்றின் விநியோக முறைகள் (சட்டவிரோத செயல்களுக்குத் தடை) திருத்த மசோதா, 2022 மீதான விவாதத்துடன், மசோதாவை பரிசீலித்து நிறைவேற்றுவதற்காக இன்று மீண்டும் தொடங்கியது.
நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, டிஎம்சி எம்பிக்கள் சுஷ்மிதா தேவ், டாக்டர் சாந்தனு சென், டோலா சென், மவுசும் நூர், சாந்தா செத்ரி, நதிமுல் ஹக் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை ராஜ்யசபா துணைத் தலைவர் சஸ்பெண்ட் செய்தார். அதேபோல், கனிமொழி எவிஎன் சோமு, சண்முகம், என்.ஆர், இளங்கோ, கிரிராஜன், அப்துல்லா உள்ளிட்ட மாநிலங்களவை திமுக எம்பிக்களான 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்