Crime: சரக்கு ரயில் எஞ்சினில் சிக்கி 5 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நபர்!
சரக்கு ரயிலின் இன்ஜினில் சிக்கி ஐந்து கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு 18 வயது இளைஞர் உயிரிழந்தார்.
சரக்கு ரயிலின் எஞ்சினில் சிக்கி 18 வயது இளைஞர் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
18 வயது இளைஞர் பலி
உத்தரப் பிரதேசம், துமாய் கிராமத்தைச் சேர்ந்த அஜீத் குமார் லோதி (18) என்பவர் கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் இன்ஜினில் சிக்கிஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குமார் லோதி ரயிலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதை அறிந்ததும், ஓட்டுநர் உடனடியாக முயன்று சிரத்து ரயில்வே நிலையத்தில் வண்டியை நிறுத்தியதாகவும், உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தற்கொலையா அல்லது தவறுதலாக அந்நபர் ரயிலில் சிக்கினாரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: போர் மேகத்தால் சூழப்பட்ட தைவான்...பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி மர்ம மரணம்.. அதிகரிக்கும் பதற்றம்
ஆளில்லா லெவல் க்ராஸிங் விபத்து
ஆளில்லா ரயில் பாதையைக் கடக்கும்போது ஏற்படும் விபத்துகளும், சரக்கு ரயில் தடம் புரளும் விபத்துகளும் நாடு முழுவதும் பல இடங்களிலும் தொடர்ந்து வருகின்றன.
அந்த வகையில், முன்னதாக வங்க தேசத்தில் ஆளில்லா ரயிவே கேட் தண்டவாளத்தை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
சிட்டகாங் மாவட்டத்தில் ஒரு பயிற்சி மையத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மிர்ஷாராய் பகுதியில் உள்ள ரயிவே கேட் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அதிவேகமாக வந்த ரயில் மோதி சில மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்