Miss Trans Global 2021 | திருநங்கை ஸ்ருதி சித்தாராவுக்கு Miss Trans Global 2021 விருது: யார் இந்த ஸ்ருதி சித்தாரா?
எனக்கு, என் சமூகத்துக்கு, என் நாட்டுக்கு, அனைத்து மாற்றுப் பாலின சமுதாயத்துக்கு, எங்கெல்லாம் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கான புன்னகை இது.
கேரளாவைச் சேர்ந்த திருநங்கை ஸ்ருதி சித்தாரா 2021-ம் ஆண்டுக்கான மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருது பெற்றதற்கு, அம்மாநில அமைச்சர் பிந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த மாற்றுப் பாலினத்தவர் ஸ்ருதி சித்தாராவுக்கு 2021-ம் ஆண்டுக்கான மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருது கடந்த 1-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக ஸ்ருதிக்குக் கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ருதி சித்தாரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருது 2021 பெற்றுள்ளேன். இதற்கான மகிழ்ச்சி எனக்கு மிகவும் பெரியது. எனக்கு, என் சமூகத்துக்கு, என் நாட்டுக்கு, அனைத்து மாற்றுப் பாலின சமுதாயத்துக்கு, எங்கெல்லாம் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கான புன்னகை இது. என்னுடைய வெற்றிகரமான பயணத்துக்குப் பின்னால் இருக்கும் அனைவருக்கும் நன்றி!'' என்று தெரிவித்துள்ளார்.
Keralite Sruthy Sithara has been selected as Miss Trans Global 2021, a title she achieved after a long fight against prejudices galore and the narrow mindset of our society. A matter of immense pride for Kerala. Congratulations Sruthy... pic.twitter.com/tJThRAHBJy
— Dr R Bindu (@rbinducpm) December 2, 2021
விருது பெற்ற ஸ்ருதி சித்தாராவுக்கு கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் பிந்து பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கேரள மண்ணின் புதல்வியான ஸ்ருதி சித்தாரா மிஸ் ட்ரான்ஸ் குளோபல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நம்முடைய சமுதாயத்தின் குறுகிய மனப்பான்மை மற்றும் முன் தீர்மானங்களுக்கு எதிராகப் போரிட்டு இந்த விருதை ஸ்ருதி பெற்றுள்ளார். இது கேரளாவுக்குப் புகழ் சேர்க்கும் ஒன்று. வாழ்த்துகள் ஸ்ருதி'' என்று அமைச்சர் பிந்து பாராட்டியுள்ளார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்