மேலும் அறிய

Kerala: பரோட்டா பார்சலை ஓபன் பண்ணா பாம்பு சட்டை! பதறிய வாடிக்கையாளர்! ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

உணவகத்தில் கொடுக்கப்பட்ட பரோட்டா பார்சலில் பாம்பு சட்டை ஒன்று கிடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் இந்திய மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்த உணவு என்றால் அது பரோட்டா குறிப்பாக கேரள மாநிலத்தில் பரோட்டா என்பது காலை உணவிற்கே கிடைக்கும் ,என்னதான் மைதா உடல் நலத்திற்கு கெடு என்ன மருத்துவர்கள் கூவி கூவி சொன்னாலும் ,சுட சுட பரோட்டா வை வாங்கி அதில் சால்நாவை விட்டு பிசைந்து சாப்பிட்டால் நன்றாக தான் இருக்கும் , அப்படி பரோட்டா சாப்பிட ஆசைப்பட்ட குழந்தைக்கு அந்த பார்சலில் பாம்பு சட்டை கிடைத்த அதிர்ச்சி சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு சந்தமுக்கு பகுதியில் ஷாலிமார் என்ற அசைவ ஓட்டல் உள்ளது. நேற்று முன்தினம் மாலை பூவாத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவர் இந்த ஓட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி உள்ளார். பின்னர் அவர் தனது மகளிடம் பரோட்டா பார்சலை கொடுத்துள்ளார். மகள் பார்சலை பிரித்து சிறிது பரோட்டா சாப்பிட்டுள்ளார். பின்னர் அந்த பார்சலை தாய் பிரியாவிடம் சாப்பிட கொடுத்துள்ளார். அப்போது புரோட்ட் பார்சலில் பாம்பின் சட்டை இருப்பதை பிரியா பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி நெடுமங்காடு காவல் நிலையத்திலும், உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் புகார் அளித்தார். போலீசாரும், நெடுமங்காடு நகராட்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் அந்த ஓட்டலுக்கு சென்று விசாரணை நடத்தினார். ஓட்டலில் இருந்து வாங்கிய பரோட்டாவில் பாம்பு சட்டை இருந்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த ஓட்டல் சீல் வைக்கப்பட்டது.

இதுபற்றி பிரியா கூறும்போது, "எனது மகள் நெடுமங்காடு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறாள். தேர்வுக்காக வந்தபோது காலதாமதம் ஆகும் எனச் சொன்னதால் அந்த ஓட்டலில் இருந்து பரோட்டா பார்சல் வாங்கினேன். என் மகள் சிறிது சாப்பிட்டுவிட்டு என்னிடம் சாப்பிடச் சொன்னாள். நான் ஒருவாய் சாப்பிட்டபோது பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை பார்த்தேன். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீஸார் வழிகாட்டுதல்படி நகராட்சி உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். உடனே அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு நடத்தி என் புகார் உண்மை என்பதை உறுதி செய்து ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

இதற்கிடையே பரோட்டா பார்சல் பொதியப்பட்ட பேப்பரில் பாம்பு தோல் ஒட்டி இருந்திருக்கலாம் என ஓட்டல் சார்பில் கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஓட்டலை சுத்தப்படுத்திவிட்டு நகராட்சியிடம் அனுமதி வான்ஹ்கிய பின்புதான் மீண்டும் செயல்பட வேண்டும் என நோட்டீஸ் வழங்ககடந்த சில நாட்களுக்கு முன்பு காசர்கோடு காஞ்சங்காடு மாவட்ட மருத்துவமனை கேண்டீனில் வாங்கிய வடையில் ஆயிரங்கால் அட்டை இருந்தது கண்டறியப்பட்ட சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதுமட்டுமல்லாது காசர்கோடு பகுதியில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட தேவநந்தா என்ற 11-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடங்குவதற்குள் நெடுமங்காட்டில் பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் ஓட்டல்களில் தொடர்ந்து இதுபோன்று நடப்பதால் கேரள சுகாதாரத்துறை பரிசோதனையை பலப்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget