மேலும் அறிய

குண்டும் குழியுமாக தேசிய நெடுஞ்சாலை...சேற்று நீர் முழுவதையும் ஊற்றிக்கொண்ட எம்.எல்.ஏ.. நூதன போராட்டம்..

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தேங்தியுள்ள சேறும் சகதியுமான நிறைந்த குட்டையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோடா மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தேங்தியுள்ள சேறும் சகதியுமான நிறைந்த குட்டையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். சாலையின் மோசமான நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அவர், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் புதன்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.

மஹாகாம சட்டப்பேரவை உறுப்பினர் தீபிகா பாண்டே சிங், சேற்று நீர் முழுவதையும் தன் மீது ஊற்றி கொண்டு வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், சாலையில் உள்ள பள்ளங்களை பழுதுபார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வரை அசையமாட்டேன் என்றும் அவர் சபதம் எடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர், " மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் சண்டையில் நான் ஈடுபட விரும்பவில்லை. மே 2022இல், NH-133 உள்ள பாதையை விரிவுபடுத்த அலுவலர்கள் நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இந்த நெடுஞ்சாலையை சரிசெய்ய மத்திய அரசு நிதி வழங்கவில்லை.  தற்போதுள்ள சூழ்நிலையில், மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதால், அதை செய்து தருமாறு முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்தும் சட்டப்பேரவை கமிட்டி அலுவலர்கள் இந்த இடத்திற்கு வரவில்லை. கோடா எம்பி நிஷிகாந்த் துபேவை ட்வீட்டரில் விமர்சித்த பாண்டே சிங், "மக்கள் பிரதிநிதிகள் இங்கு வந்து அமர்ந்தால்தான் மக்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியும்" என பதிவிட்டார்.

இதற்கு பதிலளித்த துபே, “மஹாகாமாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். இந்த நெடுஞ்சாலையை சாலை கட்டுமானத் துறை பராமரிக்கிறது. மேலும், இதற்காக, மத்திய அரசு ஆறு மாதங்களுக்கு முன்பே 75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், இதன் சீரமைப்புப் பணிகளுக்கு மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்று சிங் குற்றம் சாட்டுகிறார்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

"துபே சொல்வது அப்பட்டமான பொய். மத்திய அரசு எந்தப் பணத்தையும் ஒதுக்கவில்லை" என பாண்டே சிங், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். இது தொடர்பாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) மற்றும் சாலை கட்டுமானத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

முன்னதாக, கேரள சாலைகளில் போத்தோல்கள் நிரம்பி இருப்பதை சம்பந்தப்பட்ட துறையின் கவனத்திற்கு எடுத்து செல்லும் வகையில் அம்மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். இவரின் நூதன் போராட்டம் வீடியோவாக இணையத்தில் வெளியாகியது. அந்த கிளிப்பில், வாளி, குவளை, சோப்பு மற்றும் துண்டுடன் மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் நபர் ஒருவர் குளிப்பதைக் காணலாம். 

தலைப்பு செய்திகள்

கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
வாய்ஜாலம் பேசிய ஜோசப் விஜய் அரசுக்கு முதல் மழையிலேயே ஆப்பு! நயினார் நாகேந்திரன் அதிரடி!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
Dorothy vs The Paradise OTT: டோரதி, தி பாரடைஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எப்போ தெரியுமா? - நோட் பண்ணுங்க!
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Ragava Lawrence: பெண்களுக்கு இலவச பட்டு சேலை திட்டம்.. நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி அறிவிப்பு
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Embed widget