மேலும் அறிய
Advertisement
Headlines Today : பெண்களுக்காக பிங்க் நிற பஸ்கள்... ஒரே நாளில் 7 பதக்கம்.. இன்றைய முக்கியச் செய்திகள்!
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகல் : நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
- அனைத்து மாவட்டங்களிலும் அரசின் உதவியோடு புத்தக கண்காட்சி நடக்க வேண்டும் : புத்தக திருவிழாவை துவக்கி வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்ததால் சசிகலாவுடன் இணைந்து செயல்பட ஓபிஎஸ் முடிவு எடுத்துள்ளதாக தகவல்
- சென்னையில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் பிங்க் நிற பேருந்துகள் இன்றுமுதல் அறிமுகம்
- வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலூவை சந்தித்த நார்வே நாட்டு தூதுக்குழுவினர் நவீன துறைமுகங்கள் அமைக்க ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி
- சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94. 24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா :
- ரெப்கோ வட்டி விகிதம் அதிகரிப்பு : வீடு, வாகன கடன் வட்டி உயரும் : மாத தவணை கட்டணமும் அதிகரிக்கிறது
- விலைவாசி உயர்வை கண்டித்து பேரணி : ராகுல் உள்பட 65 எம்பிக்கள் கைது : பிரியங்கா காந்தியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றதால் பரபரப்பு
- முல்லை பெரியாறு நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு : கூடுதல் தண்ணீரை எடுத்து செல்லுமாறு தமிழக முதல்வருக்கு கேரளா கடிதம்
- புதிய துணை குடியரசு தலைவர் தேர்தல் : நாடாளுமன்றத்தில் இன்று வாக்குப்பதிவு
- டெல்லியில் வெள்ளிக்கிழமையன்று 2,419 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- இரண்டாம் கட்ட CUET இளங்கலைத் தேர்வுகளை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை திடீரென ஒத்திவைப்பு
உலகம் :
- தைவானை சுற்றி 2வது நாளாக போர் பயிற்சி ; 100 விமானங்களை அனுப்பிய சீனா : பெலோசிக்கு பொருளாதார தடை
- கைதிகள் பறிமாற்றம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்
விளையாட்டு :
- காமன்வெல்த் பேட்மிண்டன் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்திய சிந்து, ஸ்ரீகாந்த்!
- காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்கு முதல் வெள்ளி பதக்கத்தை வென்றார் அன்ஷூ மாலிக்
- காமன்வெல்த் மல்யுத்தத்தில் மீண்டும் தங்கம் வென்று அசத்தினார் பஜ்ரங் புனியா
- காமன்வெல்த் தொடரில் நேற்று மட்டும் இந்தியா 7 பதக்கங்களை அள்ளி அசத்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion