மேலும் அறிய

ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல்.. 5 பேர் பலி!

வடக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

வடக்கு ஆப்கானிஸ்தானில் ஒரு எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக போலீசார் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

"இன்று காலை 7 மணியளவில் ஹைரதன் ஆயில் நிறுவன ஊழியர்களுக்கு சொந்தமான பஸ்ஸில் பால்க் என்ற இடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது" என்று வடக்கு பால்க் மாகாணத்தின் காவல்துறை செய்தித் தொடர்பாளர் முகமது ஆசிப் வசேரி கூறினார், வெடிப்பில் குறைந்தது நான்கு பேர் காயமடைந்தனர். .

இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் சமீபத்திய மாதங்களில் நகர்ப்புற மையங்களில் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் சில தாக்குதல்களுக்கு இஸ்லாமிய மதவாத அமைப்புகள் உரிமை கோரியுள்ளன.


ஆப்கானிஸ்தானில் மேலும் ஒரு வெடிகுண்டுத் தாக்குதல்.. 5 பேர் பலி!

 

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் கடந்த செப்டம்பர் இறுதியில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 100 குழந்தைகள் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலில் பலியான குழந்தைகளில் பலர் ஷியா மற்றும் ஹசராஸ் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இது ஒரு தற்கொலைப்படை தாக்குதல். தஸ்த் இ பார்சி என்ற பகுதியில் காஜ் கல்வி நிலையத்தில் தான் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த பிபிசி செய்தியாளர் பிலால் சார்வரி, நாங்கள் இதுவரை கணக்கு செய்ததில் இருந்து 100 குழந்தைகள் உயிரிழந்தது உறுதியாகி உள்ளது. உயிரிழப்பு இன்னும் அதிகமாகலாம். அங்கே மாதிரி தேர்வு நடந்து கொண்டிருந்ததால் வகுப்பறை முழுவதும் மாணவர்கள் இருந்தனர்.

ஆப்கானிஸ்தானும் தாலிபன்களும் அவலமும்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த, 2021 மே மாதத் தொடக்கத்தில் இருந்து வெளியேறத் தொடங்கின. அப்போதில் இருந்தே ஆப்கானிஸ்தானில்  பல மாவட்டங்களை தலிபான் கைப்பற்றத் தொடங்கியது. பின்னர் கடந்த ஆகஸ்டில் ஆப்கானிஸ்தான் முழுமையாக தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.  அதிபர் அஷ்ரப் கனி ஆப்கனில் இருந்து வெளியேறிய நிலையில் தலிபான்கள் வசம் ஆட்சிப் பொறுப்பு சென்றது. இதனைத்தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். எஞ்சியவர்கள் பட்டினி, பசி, நோய், அத்துடன் இதுபோன்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் சிக்கியுள்ளனர்.

எல்லாவற்றிற்கும் கட்டுப்பாடு:

பெண்களை ஆண் துணையின்றி அதிக தூரம் பயணம் செய்வதைத் தடை செய்திருக்கிறது தாலிபான் அரசு. மேலும் ஹிஜாப் அணிந்திருக்கும் பெண்களுக்கு மட்டுமே ஆண்கள் தங்களது வாகனங்களில் இடம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 45 மைல்களுக்கு அதிகமாகப் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் துணையின்றி தனியே வந்திருந்தால் அவர்களுக்கு வாகனங்களில் இடம் கொடுப்பது தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட வரவேண்டியது நெருங்கிய ஆண் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை. பெண் கலைஞர்கள் பங்குபெறும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதித்தது.

பெண் ஊடகவியலாளர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கும்போது ஹிஜாப் அணிந்திருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது. பெண்களுக்கு மட்டும்தான் கெடுபிடியா என்றால் ஆண்களுக்கும் தான் வெஸ்டர்ன் உடை, வெஸ்டர்ன் முடிவெட்டு என எதுவும் கூடாது. கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் உள்ளன. சினிமா, பாட்டு, மதுவிற்கு தடை என பட்டியல் நீளும். பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில் மாதம் ஒரு குண்டு வெடிப்புக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறது.

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
சென்னைல ஆகஸ்ட் 5-ம் தேதி ஒரே ஒரு இடத்துல தான் மின்சாரத் தடை இருக்கு; அது உங்க ஏரியாவா பாருங்க.?
Embed widget