Dress Code Restriction : இனிமே கல்லூரி பேராசிரியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு...! உயர் கல்வித்துறை அதிரடி உத்தரவு...
பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 2,466 பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் இருக்கின்றன. இதில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரிகள், மருத்துவ கல்லூரிகள் ஆகியவை அடங்கும்.
இந்நிலையில், அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் பேராசிரியர்களும் மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் விதமாக மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என உயர் கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
பேராசிரியர்களுக்கிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை கடிதம் எழுதியுள்ளது.
பேராசிரியர்கள் தங்கள் உடலமைப்பை வெளிக்காட்டாதவாறு மேலங்கி அணிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம், தொழில்நுட்ப கல்வி இயக்ககம் மற்றும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பல தனியார் கல்லூரிகளில் பல்வேறு விதமான கட்டுபாடுகள் அமலில் உள்ளன. குறிப்பிட்ட ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு கட்டுப்பாடு இருக்கின்றன.
குறிப்பாக, பொறியியல் கல்லூரிகளில் ஃபார்மல் ஆடைகளை மட்டுமே மாணவர்கள் அணிய வேண்டும். அதேபோல, மாணவிகள், சுடிதார்களை தவிர்த்து வேறு ஆடைகளை அணிய கூடாது என்பது விதியாக உள்ளது. ஆனால், சில கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை.