சிறுமிகளை அறையில் அடைத்து வைத்து பைப்பால் அடித்த டியூஷன் ஆசிரியர்... காரணம் என்ன? வலுக்கும் கண்டனங்கள்!
டெல்லியில் வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக இரண்டு சிறுமிகளை அவர்களது ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
டெல்லியில் வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக இரண்டு சிறுமிகளை அவர்களது ஆசிரியர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஆறு மற்றும் எட்டு வயது மதிக்கத்தக்க சகோதரிகள், புதன்கிழமை அன்று வகுப்பிலிருந்து வீடு திரும்பியபோது, அழுது கொண்டிருந்தனர். அவர்களின் உடலில் பல காயங்கள் இருந்தன என அவர்களின் தந்தை கூறியுள்ளார்.
Delhi Sisters, 6 And 8, Locked In Room, Thrashed With Pipe By Tutor https://t.co/F2s6fYCn3D
— Kashmir Despatch (@KashmirDespatch) September 2, 2022
அவர்களில் ஒருவர் மயங்கி விழுந்தார் என்றும் அவர் கூறியுள்ளார். தங்களை ஒரு அறையில் அடைத்து வைத்து, பிளாஸ்டிக் பைப்பை கொண்டு டியூஷன் டீச்சர் அடித்ததாக சகோதரிகள் தந்தையிடம் கூறியுள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள பால்ஸ்வா டெய்ரியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. டெல்லி மகளிர் ஆணையம் இந்த விஷயத்தை கவனத்தில் எடுத்து, அதற்கு முன்னதாகவே காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், "இது ஒரு பயங்கரமான சம்பவம். சிறுமிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் மிகவும் கவலையளிக்கின்றன" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஒரு ஆசிரியரால் எப்படி இந்த சிறுமிகளை இவ்வளவு இரக்கமின்றி அடிக்க முடிகிறது? இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும,'' என்றார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் கைது நிலையுடன் முதல் தகவல் அறிக்கையின் நகலையும் டெல்லி மகளிர் ஆணையம் கோரியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட விரிவான நடவடிக்கை அறிக்கையை செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் அளிக்குமாறு டெல்லி காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Delhi Sisters, 6 And 8, Locked In Room, Thrashed With Pipe By Tutor https://t.co/aI8CzXa6fF
— Kashi Post (@PostKashi) September 2, 2022
சிறுமிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் அப்பகுதியையே உலுக்கு உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், சிறுமி/சிறுவர்களை உடல் ரீதியாக மட்டும் இன்றி, மன ரீதியாகவும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.
மாணவ, மாணவிகளை கையாளும் போது, மிகுந்த கவனமுடனும் அக்கறையும் தேவை. ஏனெனில், சிறிய வயதில் அவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்கள் வாழ்க்கை முழுவதும் அவர்களின் உளவியலில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்த கூடிய தன்மை கொண்டது.