மேலும் அறிய

அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டின்னர்...பிரதமர் மோடிக்காக யு டர்ன் அடித்த ஆட்டோ டிரைவர்

குஜராத்தில் ஆட்டோ டிரைவர் விக்ரம் தண்டனி என்பவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, குஜராத்தில் ஆட்டோ டிரைவர் விக்ரம் தண்டனி என்பவர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தார். சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் என அனைத்திலும் இது செய்தியாக வெளியாகி இருந்தது. 


அரவிந்த் கெஜ்ரிவாலுடன் டின்னர்...பிரதமர் மோடிக்காக யு டர்ன் அடித்த ஆட்டோ டிரைவர்

இந்நிலையில், யு டர்ன் அடித்துள்ள அந்த ஆட்டோ டிரைவர், தான் பிரதமர் மோடியின் விசிறி என்றும் பாஜகவின் தீவிரமான ஆதரவாளர் என்றும் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோடி கலந்து கொண்ட பேரணியில், பாஜகவின் காவி துண்டு மற்றும் தொப்பியை அணிந்து காணப்பட்டார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பியபோது, ​​செப்டம்பர் 13 ஆம் தேதி அகமதாபாத்தில் ஆட்டோரிக்ஷா தொழிற்சங்கத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதால், கெஜ்ரிவாலை தனது வீட்டிற்கு அழைத்ததாக கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்டோ டிரைவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்குச் சென்ற உணவருந்தினார். இச்சம்பவம் குறித்து விவரித்த அவர், "நான் கெஜ்ரிவாலை இரவு உணவிற்கு அழைத்தேன். ஏனென்றால் எங்கள் தொழிற்சங்கத் தலைவர்கள் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். 

எனது வீட்டில் அவருக்கு விருந்து அளிக்க நான் முன்வந்தவுடன், கெஜ்ரிவால் அதை ஏற்றுக்கொண்டார். இது இவ்வளவு பெரிய பிரச்சினையாக மாறும் என்று எனக்குத் தெரியாது. மற்றபடி, அக்கட்சியுடன் (ஆம் ஆத்மி) தொடர்பில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு எந்த ஆம் ஆத்மி தலைவருடனும் நான் தொடர்பில் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர், தான் பிரதமரின் பெரிய அபிமானி என்றும் எப்போதும் பாஜகவுக்கு வாக்களித்து வருவதாகவும் குறிப்பிட்டார். "நான் மோடிஜியின் தீவிர ரசிகன் என்பதால்தான் (பேரணிக்காக) இங்கு வந்தேன். நான் ஆரம்பம் முதலே பாஜகவில் இருந்து வருகிறேன். கடந்த காலங்களில் எப்போதும் என் வாக்கை பாஜகவுக்கே செலுத்தி உள்ளேன். இதை நான் எந்த அழுத்தத்திலும் கூறவில்லை.

குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று, ஆட்டோ டிரைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அக்கூட்டத்தில்தான், தன் வீட்டிற்கு வந்து சாப்பிடுமாறு ஆட்டோ டிரைவர் கெஜ்ரிவாலை கேட்டு கொண்டார்.

தலைப்பு செய்திகள்

கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
கொல்கத்தா துர்கா பூஜையில் 3 நிமிடங்களில் கோர விபத்து.! 19 பேர் பலி.. கூட்ட நெரிசலுக்கு இதுதான் காரணமா?
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
”பாண்டி மெலாஞ்ச் 2027” புதுச்சேரி சுற்றுலாத்துறையின் கூட்டு முயற்சி - பிரமாண்ட கலாச்சார திருவிழா..!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Reliance: ”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி
”பயந்தவங்க நாங்க இல்ல, ஸ்டார்லிங்க் வரட்டும்” மஸ்கிற்கு பதிலடி தந்த ரிலையன்ஸ் ஓனர் அம்பானி

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
France Protest: பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
பற்றி எரியும் ஃப்ரான்ஸ்..! வன்முறையான போராட்டம் - தீ வைப்பு, கடைகளில் கொள்ளை - அரசு வார்னிங்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
அரிசி விலை உயர்வுக்கு குட் பை! தஞ்சையில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை தொடக்கம்
TN Weather News: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், இன்று எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Tiger Shroff : துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
துப்பாக்கிச் சூடு..! ட்ரைவருக்கு காயம் - காரை தானே ஓட்டி உயிரை காப்பாற்றிக் கொண்ட டைகர் ஷெராஃப்
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
திருச்சி வழியாக தாம்பரம் - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்: பயணிகள் கூட்ட நெரிசலுக்கு தீர்வு
Duster Vs Victoris: ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
ரெனால்ட் Vs விக்டோரிஸ்..! எந்த ஹைப்ரிட் SUV பெஸ்ட் - விலை, மைலேஜ், வசதி முழு ஒப்பீடு
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
Tiger Shroff: பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச்சூடு.. பெரும் பரபரப்பு.. சல்மான் கான் காரணமா?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
School Holiday: வானிலை மையம் கொடுத்த வார்னிங்.. பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி விடுமுறை?
Embed widget