Sonu Sood | காதலிக்கு ஐபோன் கேட்ட நபர் - நறுக்கென்று பதிலடி கொடுத்த சோனு சூட்!
தன்னுடைய காதலிக்கு ஐபோன் வாங்க உதவுங்கள் என்று கேட்டவருக்கு நடிகர் சோனு சூட் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சமூக வலைதளங்களில் உதவி கேட்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பின் முதலாவது மற்றும் இரண்டாவது அலையின் போது பாலிவுட் நடிகர் சோனு சூட் சிறப்பான உதவிகளை செய்து வந்தார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் வரும் கோரிக்கைகளுக்கு உதவி செய்து வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒருவர் வேடிக்கையான உதவி கோரிக்கையை வைத்தார். அதில், “என்னுடைய காதலி நீண்ட நாட்களாக ஐபோன் வேண்டும் என்று கேட்டு வருகிறார். இதற்கு நீங்கள் எதாவது செய்ய முடியுமா” என்று ஹிந்தியில் பதிவிட்டிருந்தார். அவருக்கு சோனு சூட்ஹிந்தியில் பதிலளித்துள்ளார். இதற்கு அவருடைய ட்விட்டர் பதிவில்,”எனக்கு அவரை பற்றி தெரியாது. ஆனால் நான் அவருக்கு ஐபோன் வாங்கி தந்து விட்டால் உங்களுக்கு எதுவும் இருக்காது ”என நக்கலாக பதிவிட்டிள்ளார். இதன்மூலம் அவருக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
இதேபோல தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பாக மற்றொரு நபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒருபதிவை செய்துள்ளார்.அதில்,, “நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனை ஆட்டமிழக்க செய்ய உதவுங்கள்”என ஹிந்தியில் பதிவிட்டிருந்தார். இதற்கும் சோனு சூட் தன்னுடைய தனி பானியில் பதிலளித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ,”இந்தியா அணியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். ஆகவே அவர்கள் வில்லியம்சனை ஆட்டமிழக்க செய்வார்கள்” எனக் கூறினார். அவர் கூறியதை போல் வில்லியம்சன் இஷாந்த பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
Covid Vaccine | 88 லட்சத்திலிருந்து 53 லட்சம் : தடுப்பூசி எண்ணிக்கை சரிவு எழுப்பும் கேள்விகள் என்ன?
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பின் முதல் அலையின் போது பலருக்கு தேவையான உதவிகளை செய்து சோனு சூட் செய்து வந்தார். குறிப்பாக முதல் அலையின் போது புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய மாநிலங்களுக்கு திரும்பி செல்ல உதவி அளித்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாமல் போன மாணவர்கள் சிலருக்கும் மொபைல் போன் உள்ளிட்டவற்றை வாங்கி தந்து உதவி அளித்தார்.
அதேபோல் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது ஆக்சிஜன் தேவை, மருத்துவமனை படுக்கை வசதி ஆகியவை தொடர்பாக பதிவிட்டவர்களுக்கு உதவி செய்தார். சமூக வலைதளத்தில் வந்த கோரிக்கைகளுக்கு தம்மால் முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்தார். இவரின் செயலை பலரும் பாராட்டி வந்தனர். இவ்வாறு உதவி செய்ததன் மூலம் இவர் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒரு பெரிய ஹீரோவாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சீனா, பாக்., ப்ரஷர்.. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... சாத்தியமா?