மேலும் அறிய

Centre on J&K : சீனா, பாக்., ப்ரஷர்.. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... சாத்தியமா?

சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சற்று பரபரப்பாகவே இயங்கிவருகிறது. பாகிஸ்தான் பரபரப்பாவதை அண்டை நாடான அப்கானிஸ்தான் மீதும் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசு நாடான அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து நாளை (24 ஜூன்)  காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களிடம் விவாதிக்க உள்ளார் பிரதமர் மோடி.  கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஜம்மு மற்றும் காஷ்மீர் தனித்தனி யூனியன் பிரதேசங்களாக 31 அக்டோபர் 2019ல் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து ஒமர் அப்துல்லா, ஃபரூக் அப்துல்லா மற்றும் மெகபூபா முஃப்தி உள்ளிட்ட அந்த மாநிலத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். 

Centre on J&K : சீனா, பாக்., ப்ரஷர்.. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... சாத்தியமா?

கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் மறக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது மத்திய பாரதிய ஜனதா அரசு காஷ்மீரை சிறப்பு அந்தஸ்து இல்லாத மாநிலமாக அறிவிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒருகட்டமாக டெல்லியில் இதுதொடர்பாக பிரதமர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினார். 

இதன் தொடர்ச்சியாக நாளை காஷ்மீரின் முக்கியக் கட்சித்தலைவர்களைச் சந்திக்க உள்ளார் பிரதமர். இந்தச் சந்திப்பில் காஷ்மீரின்  தொகுதிவாரி வரைபடம் (BluePrint of constituencies) குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அரசின் இந்த திடீர் முடிவுக்கு சர்வதேச அழுத்தம் காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக காஷ்மீரில் ஜனநாயக் உரிமைகள் மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்கு அமெரிக்கா கொடுத்த அழுத்தம்தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

Centre on J&K : சீனா, பாக்., ப்ரஷர்.. காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து... சாத்தியமா?

அமெரிக்கா கொடுக்கும் அழுத்தமும் சீன ஆபத்தும்...
 
இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அல்லாத மாநில அந்தஸ்து சாத்தியமா, அங்கே தற்போதைய சூழல் என்ன என்பது குறித்து காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் அனுராதா பஸினிடம் கேட்டறிந்தோம். அவர் கூறுகையில், ‘காஷ்மீரின் அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கு மாநில அந்தஸ்து வழங்குவது மட்டும் போதாது. அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 யும் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரவேண்டும் என்பதுதான் இங்கே காஷ்மீரில் இருக்கும் அரசியல் கட்சித்தலைவர்களின் நிலைப்பாடு. நாளை பிரதமருடனான சந்திப்பில் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைக்க வாய்ப்புள்ளது. ஆனால் மத்திய அரசு இந்தக் கோரிக்கைக்குச் சம்மதிக்க வாய்ப்பில்லை. அதனால் நாளைய சந்திப்பில் பெரிதாக எதுவும் நிகழாது.மேலும் இங்கே மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு நிலைப்பாடுடையவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் பிரதமருடனான நாளைய சந்திப்பில் மாநில அந்தஸ்தே வேண்டாம் எனக் கோரிக்கை வைக்கக் கூட வாய்ப்புள்ளது. மற்றபடி காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் முடிவை அரசு எடுக்க பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஒருபக்கம் சீனாவுடனான இந்திய எல்லையில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவிவருகிறது. மற்றொருபக்கம் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதிலிருந்து காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் சற்று பரபரப்பாகவே இயங்கிவருகிறது. பாகிஸ்தான் பரபரப்பாவதை வல்லரசு நாடான அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கிறது.அதனால் அமெரிக்கா இந்தியாவுக்குக் கொடுக்கும் தொடர் அழுத்தத்தால்தான் மீண்டும் மாநில உரிமை தருவதற்கு மத்திய அரசு மறுபரிசீலனை செய்துவருகிறது'. 

Also Read: விஸ்மயாவைப் போலவே மேலும் 2 இளம்பெண்கள் மரணம் : அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
Fengal Cyclone: பேய்மழை! விடாமல் வீசும் சூறைக்காற்று! திக்.. திக்.. கதியில் சென்னைவாசிகள்!
TVK Vijay :
TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேசி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?
Fengal Cyclone: இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
இருளில் மூழ்கியது செங்கல்பட்டு.. புயலால் தடையான மின்சாரம்.. . மீண்டும் வருவது எப்போது?
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
கள்ளக்காதல் விவகாரம்; வாலிபரை கொன்று சாலையில் தூக்கி வீசிய சம்பவம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயல்! சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்யும் கனமழை!
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகே ஃபெஞ்சல் புயல் - 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், சூறாவளிக்காற்று, கொட்டும் கனமழை, வானிலை அறிக்கை
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
Fenjal cyclone: மிரட்டும் ஃபெஞ்சல் புயல் - 90கிமீ வேகத்தில் சூறாவளிக்காற்று, பாதுகாப்பாக இருக்க சிம்பிள் டிப்ஸ்
EPS: திருப்பூரில் 3 பேர் படுகொலை... தினந்தோறும் கொலை, கொள்ளை - கொதித்தெழுந்த இபிஎஸ்
திருப்பூரில் 3 பேர் படுகொலை... தினந்தோறும் கொலை, கொள்ளை - கொதித்தெழுந்த இபிஎஸ்
Embed widget