மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் ஆர்.வி.எஸ். என்ற தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் சேலத்தை சேர்ந்த அகிலேஷ் (18) என்ற மாணவர் பி.. மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 22-ம் தேதியன்று தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் அகிலேஷ் விடுதியில் இருந்த போது, அதே கல்லூரியில் அதே பாடப்பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் குரல் இனியன், அரவிந்த் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் ஆகிய நான்கு பேரும் அங்கு வந்துள்ளனர்.

அப்போது கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக் கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறி அகிலேஷை எச்சரித்தாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நேற்று அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும், கல்லூரிக்கு வெளியில் சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் அறை எடுத்து தங்கியுள்ள நான்காம் ஆண்டு மாணவர் வெங்கடேஷ் என்பவரது அறைக்கு வரச் சொல்லியுள்ளனர்.

இதன் பேரில் அங்கு சென்றபோது அகிலேஷ் தவிர மற்ற 12 மாணவர்களையும் எச்சரித்து கல்லூரிக்குள் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. அகிலேஷ் என்பவரை மட்டும் முத்துக்குமார், கோகுல் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சூலூரில் ஆவின் டீக்கடையில் வேலை பார்க்கும் முத்துக்குமாரின் நண்பர் தனபால் என்பவரது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


மீண்டும் மீண்டுமா? கோவையில் ராகிங் விவகாரத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது

அங்கு மூவரும் சேர்ந்து அகிலேஷை கெட்ட வார்த்தைகளால் திட்டி, கைகளால் தாக்கியதாகவும், அதில் அகிலேஷுக்கு இடது நெற்றியில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அகிலேசின் வாட்ச் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்தாகவும், கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து முத்துக்குமார், கோகுல், தனபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகிலேஷ் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506 (1) மற்றும் தமிழ்நாடு ராக்கிங் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 பேரின் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கல்லூரி மாணவர்கள் முத்துக்குமார், கோகுல் மற்றும் ஆவின் டீக்கடையில் பணியாற்றும் தனபால் ஆகிய 3 பேரையும் சூலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் ராகிங் செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், மேலும் ஒரு கல்லூரி மாணவர்கள் மீது ராகிங் புகாரில் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
Syros EV Vs Windsor EV: கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
கியா சைரோஸ் இவி-யா.? எம்ஜி வின்ட்சர் இவி-யா.? ரெண்டுல எத வாங்குறது பெஸ்ட்; இதோ ஒரு முழு ஒப்பீடு
Embed widget