மேலும் அறிய

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

தலைமுறை தலைமுறையாக காடுகளில் இவர்கள் வாழ்வதாலும், கொரோனா நெருக்கடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக புதியதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் உண்ண வழியின்றி தவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தினசரி பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் நீடித்து வருகிறது. நகரப்பகுதிகளில் மட்டுமின்றி கிராமப்புறங்கள் மற்றும் மலைக்கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. ஊரடங்கு காரணமாக பலரும் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியும், 14 வகையான பொருட்களும் பேரூதவியாக அமைந்துள்ளன. ஆனால் ஏராளமான பழங்குடிகள் ரேசன் அட்டை இல்லாததால், அந்த உதவிகளை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

இதுகுறித்து பழங்குடியின செயற்பாட்டாளர் தன்ராஜ் பேசுகையில், "கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்ட ஆனைமலைத் தொடர் மற்றும் அதனை ஒட்டிய வனப்பகுதியில் வாழும் 35  பழங்குடி கிராம மக்கள்  கோவிட் பெருந்தொற்றால் நேரிடையாகவும், மறைமுகமாகவும்  பாதிக்கப்பட்டுள்ளனர். அடர்ந்த வனத்திற்குள் உள்ள இக்கிராமங்களுக்கு செல்வதற்கு சாலை, போக்குவரத்து வசதி கிடையாது.  மின்சாரம் வசதியோ, மருத்துவ, பலசரக்கு கடை வசதிகள் இங்கு கிடையாது. இப்பகுதியானது ஆனைமலை புலிகள் காப்பக பகுதியாக இருப்பதால் ஊரடங்கில் யாரும் எளிதில் பிற பகுதிகளுக்கு சென்று வர  முடியாது. 

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

இங்கிருக்கும் அனைத்து கிராமங்களில் உள்ள மொத்த  குடும்பங்களில் சுமார்  10 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் அரசின் குடும்ப அட்டைகள் இல்லாமல் உள்ளன. குறிப்பாக சர்க்கார்பதி (5/27), நாகரூத்து (9/50), கூமாட்டி (7/37), எருமைப்பாறை (3/37), மாவடப்பு (12/120), குழிப்பட்டி (20/120), காட்டுப்பட்டி (8/36), கல்லார் (4/23) உடுமன் பாறை (3/36), திருமூர்த்தி நகர் (17 /110), கீழ் பூனாட்சி (4/45) காடம்பாறை (4/14) மற்றும் கோபால்பதி புது காலனி (7/23)  குடும்ப அட்டை இல்லாத நிலை உள்ளது. இது போன்ற நிலை ஆனைமலை தொடரில் நிலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ளது. சில பழங்குடியின கிராமங்களில் 40 சதவீதம் வரை ரேசன் அட்டை இல்லாத நிலையும் உள்ளது.

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

தலைமுறை தலைமுறையாக காடுகளில் இவர்கள் வாழ்வதாலும், கொரோனா நெருக்கடியால் கடந்த ஒன்றரை வருடங்களாக புதியதாக ரேசன் கார்டு வேண்டி விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது. இ சேவை முறையில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்டவை செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன. பழங்குடி தனிப்பெண்கள் பலருக்கும் ரேசன்கார்டு பெற இயலாத நிலை உள்ளது.  

ஒரு வாய் சோத்துக்கு சிரமப்படும் பழங்குடிகள்; ரேசனும் இல்லை... நிவாரணமும் இல்லை!

ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்துள்ள பழங்குடிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பது ஒரு பெரிய தொகை. பாரபட்சம் பார்க்காமல் அனைத்து குடும்ப அட்டைகளுக்கு கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் தமிழ்நாடு  அரசு பொருளாதாரத்தில் ஏழ்மையில் வாடும் மலைவாழ் பூர்வகுடிகளுக்கும் பிற பழங்குடிகளுக்கு தாயுள்ளத்தோடு உதவ வேண்டும். முறையாக கணக்கெடுத்து அரசின் உதவிகள் பெற ஏதுவாக குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு உடனடியாக  குடும்ப அட்டை வழங்குவதோடு, கொரோனா நிவாரண உதவிப்பணமும், பொருட்களும் வழங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குரலற்ற சமூகமாக உள்ள பழங்குடிகள் மீது தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

பழங்குடியின கிராமங்களிலும் கொரோனா தொற்று பரவி வருகிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால், சிகிச்சைக்காக வந்து செல்வதில் பல்வேறு சிரமங்கள் நிலவுகின்றன. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் பரிசோதனை மருத்துவ உதவிகள் கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 26 முதல் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களா? - உண்மை என்ன? வெளியான தகவல் 
ஜனவரி 26 முதல் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களா? - உண்மை என்ன? வெளியான தகவல் 
3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலை, 50 ஆயிரம் கொள்ளை; சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இதுதான் காரணம்- அதிரவைத்த அன்புமணி
3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலை, 50 ஆயிரம் கொள்ளை; சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இதுதான் காரணம்- அதிரவைத்த அன்புமணி
A R Rahman : இதுக்கு பேர்தான் கோ இன்ஸிடன்ஸ்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் விவாகரத்து
A R Rahman : இதுக்கு பேர்தான் கோ இன்ஸிடன்ஸ்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் விவாகரத்து
UGC NET 2024: அரசுக் கல்லூரி ஆசிரியர் ஆகணுமா? யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
UGC NET 2024: அரசுக் கல்லூரி ஆசிரியர் ஆகணுமா? யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal DMK Fight | ’’டேய்..நீ யார்ரா‘’ திமுக நிர்வாகிகள் கடும் மோதல் சமாதானப்படுத்திய அமைச்சர்AR Rahman on Divorce : ”இப்படி பண்ணிட்டியே சாய்ரா..சுக்குநூறா உடைஞ்சுட்டேன்” மனம் திறந்த AR.ரஹமான்AR Rahman Saira Divorce Reason : ”வலியும், வேதனையும் அதிகம்”ஏ.ஆர் - சாய்ரா பகீர்!BJP Controversy Video |’’நாங்க ஆட்சிக்கு வரலனா..உங்கள சூறையாடிருவாங்க!’’பாஜக மதவெறி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 26 முதல் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களா? - உண்மை என்ன? வெளியான தகவல் 
ஜனவரி 26 முதல் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களா? - உண்மை என்ன? வெளியான தகவல் 
3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலை, 50 ஆயிரம் கொள்ளை; சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இதுதான் காரணம்- அதிரவைத்த அன்புமணி
3 ஆண்டுகளில் 6 ஆயிரம் கொலை, 50 ஆயிரம் கொள்ளை; சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு இதுதான் காரணம்- அதிரவைத்த அன்புமணி
A R Rahman : இதுக்கு பேர்தான் கோ இன்ஸிடன்ஸ்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் விவாகரத்து
A R Rahman : இதுக்கு பேர்தான் கோ இன்ஸிடன்ஸ்.. ஏ.ஆர் ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பெண் விவாகரத்து
UGC NET 2024: அரசுக் கல்லூரி ஆசிரியர் ஆகணுமா? யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
UGC NET 2024: அரசுக் கல்லூரி ஆசிரியர் ஆகணுமா? யுஜிசி நெட் தேர்வு அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு எழுதுபவர்களா?- இதைச் செய்ய இன்றே கடைசி!
GATE 2025: பொறியியல் கேட் தேர்வு எழுதுபவர்களா?- இதைச் செய்ய இன்றே கடைசி!
Actress Abhirami : தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா நடிகை அபிராமி ?...எதனால் இந்த குழப்பம்
Actress Abhirami : தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாரா நடிகை அபிராமி ?...எதனால் இந்த குழப்பம்
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
என்ன நடக்குது? ஒரே நாளில் ஆசிரியை, வழக்கறிஞர் கொடூர கொலை! ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலி!
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Teacher Death: அரசு இடங்களில்கூட பாதுகாப்பு துளியும் இல்லை: தஞ்சை ஆசிரியை கொலைக்கு ஈபிஎஸ் கண்டனம்
Embed widget