Coimbatore Power Shutdown: கோவை மக்களே கவனமா இருங்க! பராமரிப்பு பணி காரணமாக முக்கிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்! விவரம் உள்ளே
Coimabatore Power Shutdown: கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (26.06.25) மின்சார பராமரிப்பு பணி நடைப்பெற உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

Coimbatore Power Shutdown: கோவையில் பல்வேறு பகுதிகளில் நாளை (26.06.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மாதாந்திர மின் பராமரிப்பு பணி
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதனால் மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. கோவை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
எந்த நேரத்தில் மின் நிறுத்தம்?
பராமரிப்பு பணிக்காக வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அறிவிக்கப்பட்ட இடங்களில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 மணி அல்லது 10 மணியிலிருந்து மாலை 4 அல்லது 5 மணிவரை, மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
மின் தடைப்பகுதிகள்:
பீடம்பள்ளி துணை மின் நிலையம்- காலை 9 மணி முதல் மாலை 5 வரை
கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி, நாய்கன்பாளையம், பள்ளபாளையம்
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையம் : காலை 9 மணி முதல் மாலை 4 வரை
மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் (ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம், பிரீமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
நாளை(26.06.25) மின் தடை செய்யப்படவுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் அத்தியாவசிய தேவை சார்ந்த அனைத்து வேலைகளையும் முன்பே செய்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.























