மேலும் அறிய

மூடப்பட்ட ஆட்டோ LPG பங்க்... வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் டிரைவர்கள்...

கோவை உக்கடத்தில் ஆட்டோ LPG பங்க் திடீர் மூடல். எரிவாயு தட்டுப்பாட்டால் வாகன ஓட்டிகள் அவதி.

கோவை நகரில் ஆட்டோ மற்றும் கார் வாடகை வாகனங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் LPG எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதால், உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த ஆட்டோ LPG எரிவாயு நிரப்பு நிலையம் திடீரென மூடப்பட்டு, வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கோவை நகரில் இயங்கி வரும் பல LPG எரிவாயு பங்குகளில் கடந்த சில நாட்களாக எரிவாயு சரியான அளவில் கிடைக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சில பங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறிப்பாக உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த LPG நிரப்பு நிலையம் மூடப்பட்டதால், அங்கு எரிவாயு நிரப்ப வந்த ஆட்டோ மற்றும் கார் ஓட்டிகள் பலர் திரும்பிச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எரிவாயு நிரப்ப வரிசையில் காத்திருந்த ஓட்டுநர்களுக்கு, LPG கேஸ் லோடு வராததால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக பங்க் நிர்வாகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. புதிய கேஸ் லோடு வந்ததும் மீண்டும் விநியோகம் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எரிவாயு நிரப்ப வரிசை

டீசல் மற்றும் பெட்ரோலை ஒப்பிடும்போது LPG எரிவாயு குறைந்த செலவில் கிடைப்பதால், கோவையில் இயங்கும் பெரும்பாலான ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் LPGயை அதிகமாக பயன்படுத்தி வருகின்றன. தற்போது LPG ஒரு லிட்டர் ரூ.64.80 என்ற குறைந்த விலையில் கிடைப்பதால், தினசரி ஓட்டுநர்கள் இதையே நம்பி இயக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் திடீரென ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டால், வேலை நேரத்தில் வாகனங்களை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிலர் பல இடங்களில் சுற்றியும் எரிவாயு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக தெரிவித்தனர்.

கோவை நகரில் LPG எரிவாயு தட்டுப்பாடு நீடிக்காமல், தேவையான அளவில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்றும், வாடகை வாகன ஓட்டிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
Puducherry JIPMER : ஆராய்ச்சியில் அசத்தும் ஜிப்மர்... தேசிய சிறப்பு மைய அங்கீகாரம்!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
டியூசன் மாஸ்டரை கொல்ல திட்டம்... கையில் குண்டு வெடித்து சிதைந்த கை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்
புதுச்சேரி எம்.பி.பி.எஸ். சீட்டுக்கு போலி சான்றிதழா? 15 மாணவர்களுக்கு நோட்டீஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை தொடரும்.. சென்னையில் என்ன நிலவரம்? - வானிலை அறிவிப்பு இதோ!
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Embed widget