மேலும் அறிய

கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; உற்சாகத்தோடு குவியும் புத்தகப் பிரியர்கள்.. இதெல்லாம் புதுசு மக்களே..

இன்று முதல் 31ம் தேதி வரை கொடிசியா அரங்கில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.

கோவை கொடிசியா அரங்கில் 6 வது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா இன்று துவங்கியது. கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து இந்த புத்தகத் திருவிழாவை நடத்துகின்றன. இன்று நடைபெற்ற துவக்க விழா நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து புத்தகக் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சில புத்தகங்களையும் வாங்கினார். இளம் படைப்பாளர்களுக்கான விருதுகள் கவிஞர் நிழலி, சுரேஷ் பிரதீப், வடிவரசு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; உற்சாகத்தோடு குவியும் புத்தகப் பிரியர்கள்.. இதெல்லாம் புதுசு மக்களே..

இன்று முதல் 31ம் தேதி வரை கொடிசியா அரங்கில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் 2 இலட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 280 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. 150 பதிப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சியில் 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் தரப்படுகிறது. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; உற்சாகத்தோடு குவியும் புத்தகப் பிரியர்கள்.. இதெல்லாம் புதுசு மக்களே..

நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என பல்வேறு வகையிலான புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அதேபோல மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்களும் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரபலமான நூல்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் மக்களிடம் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; உற்சாகத்தோடு குவியும் புத்தகப் பிரியர்கள்.. இதெல்லாம் புதுசு மக்களே..

கோவை புத்தகத் திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக  நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகத் திருவிழா கோவையில் நடைபெறுகிறது. இது வாசகர்கள் மற்றும் புத்தகப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத் திருவிழாவிற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் எனவும், 2 கோடி ரூபாய்க்கும் மேல் புத்தக விற்பனை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

கோவை புத்தகத் திருவிழா துவக்கம் ; உற்சாகத்தோடு குவியும் புத்தகப் பிரியர்கள்.. இதெல்லாம் புதுசு மக்களே..

புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் புத்தக வெளியீடு உள்ளிட்ட பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக வரும் 28ம் தேதி 5,000 மாணவர்கள் ஒரே நேரத்தில் இணைந்து திருக்குறள் வாசிக்க உள்ளனர். 10 நாட்களும், பேச்சுப்போட்டி, சிலம்பாட்டம், எழுத்தாளர் வாசகர்கள் சந்திப்பு, கட்டுரைப்போட்டி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவர்கள் இலவசமாக அவினாசி சாலை வழியாக செல்லும் டவுன் பேருந்துகள் கொடிசியா வளாகம் வரை சென்று திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!

Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்

Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!

ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Fengal Cyclone LIVE: இன்று மாலை 5.30 மணிக்கு உருவாகிறது ஃபெங்கல் புயல்
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Group 4 Counselling: தேர்வர்களே…வந்தது அப்டேட்! குரூப் 4 கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Keerthy Suresh : 15 ஆண்டுகால காதல்...ஹாரி பாட்டர் ஸ்டைலில் திருமணத்தை அறிவித்த கீர்த்தி சுரேஷ்

Pink Auto: பெண்களுக்கு பிங்க் ஆட்டோ வாங்க மானியம்; கட்டுப்பாடு நீக்கம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?

பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்

Embed widget