Chembarambakkam Water Update: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு: 2000 கன அடி நீர் வெளியேற்றம்!
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1000 கன அடியிலிருந்து 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டிவருகிறது. இதனால் சென்னையில் இருக்கும் புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பிவருகிறன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகிலிருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்துவந்ததால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே பிற்பகல் 3 மணி அளவில் அணையின் நான்காவது மதகிலிருந்து மேலும் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. மாலைவரை மொத்தம் செம்பரம்பாக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், செம்பரம்பாக்கத்திலிருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்ட சுழலில் தற்போது அந்த அணையிலிருந்து 2000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, புழல் ஏரியிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 1500 கன அடியாக இருந்த சுழலில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) November 7, 2021
பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவியுங்கள். pic.twitter.com/rMkJoXsGWo
இதற்கிடையே, விடிய விடிய பெய்துகொண்டிருக்கும் மழையால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட புரசைவாக்கம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னைக்கு வருபவர்கள் தங்களது பயணத்தை 2, 3 நாள்கள் ஒத்திவைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
கழக நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் அவரவர் பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு உணவு, பாதுகாப்பான உறைவிடம், மருந்துகள் முதலிய அவர்களின் அடிப்படை, அவசரத் தேவைகளை நிறைவேற்றிடுக! (3/3) pic.twitter.com/I1g6lkXAI0
— M.K.Stalin (@mkstalin) November 7, 2021
இன்று காலை நிலவரப்படி மட்டும் வில்லிவாக்கத்தில் 162 மி.மீட்டரும், நுங்கம்பாக்கத்தில் 145 மி.மீட்டரும், புழலில் 111 மி.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் விடிய, விடிய மழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிக கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் மேலும் அதிகனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் சென்னைவாசிகள் பீதியில் இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்