மேலும் அறிய

ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தொழிற்சாலையில் முதலமைச்சர் ஸ்டாலின்  ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு மேற்கொண்டார்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் அமைந்துள்ள ஐநாக்ஸ் ஆக்சிஜன் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஆய்வு மேற்கொண்டார். 
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை  காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது . இதனால் பொதுமக்கள் பலரும் தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பொது மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது .
 
ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தொழிற்சாலையில் முதலமைச்சர்  ஸ்டாலின்  ஆய்வு
அதேபோல் பல நிறுவனங்களுக்கு சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். மேலும் தற்போது உள்ள சூழலில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நாளுக்கு நாள் ஆக்சிஜன் தேவையானது அதிகரித்துள்ளது.
 
ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தொழிற்சாலையில் முதலமைச்சர்  ஸ்டாலின்  ஆய்வு
 மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் சிப்காட்டில்  இயங்கும்  ஆக்ஸிஜன் தயாரிக்கும் தொழிற்சாலையான  ஐநாக்ஸ் ஆக்சிஜன் தொழிற்சாலையில் ஆக்சிஜன் ஆனது தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் பல்வேறு மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து கொண்டு செல்லப்படுகின்றது . இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 145 மெட்ரிக் டன் ஆக இருந்த ஆக்சிஜன் உற்பத்தி  அண்மையில் 195 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டு தொடர்ந்து தமிழகம் மற்றும்  ஆந்திரா,தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஐநாக்ஸ் ஆக்சிஜன்  தொழிற்சாலையில் தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தொழிற்சாலை நிர்வாகத்தினர் கவனம் இங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜன் அளவு குறித்தும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும்  மேலும் தொழிற்சாலைக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டு அறிந்து ஆய்வு மேற்கொண்டார். அதேபோல் கூடுதலாக ஆக்சிஜன் தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஏதாவது இருக்கிறதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். இதற்கு முன்னதாக ஒரகடம்  தனியார் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
 
ஸ்ரீபெரும்புதூர் ஆக்சிஜன் தொழிற்சாலையில் முதலமைச்சர்  ஸ்டாலின்  ஆய்வு
 
இந்த மாத இறுதிக்குள் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசியை போட்டுக்கொள்வார்கள் என தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது . தடுப்பூசியை துவக்கி வைத்த பின், தொழிற்சாலையில் உற்பத்தியாகும் வாகனங்களையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். 
இந்த ஆய்வின் போது தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் , மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, ஸ்ரீ பெரும்புதூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை  மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர். தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை இருக்கும் நிலையில் முதல்வரின் இந்த ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
TN Rain: ” சீக்கிரமா வீட்டிற்கு போயிடுங்க” இன்று இரவு இந்த 12 மாவட்டங்களில் மழை இருக்கு.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில்  ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
ரூ.15 கோடிக்கு ஆளுநர் பதவி.? சதுரங்க வேட்டை பட பாணியில் ஏமாந்த சென்னை விஞ்ஞானி.!
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
Annamalai: முதல்வர் ஸ்டாலினால் இதை சொல்ல முடியுமா? ஆதாரத்தை வெளியிடுவேன்: புது செக் வைத்த அண்ணாமலை 
"ஆக்சன் - அக்ரஷன்" இடதுசாரி தீவிரவாதத்திற்கு ஆப்பு.. ஒரே போடு போட்ட மத்திய அரசு!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
Look Back 2024 : 2024-ன் சைலண்ட் சம்பவக்காரர்கள்.. நிதிஷ் முதல் பெத்தேல் வரை... கவனம் ஈர்த்த வீரர்களின் முழுவிவரம் இதோ!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
பெண்களே! ஏதாச்சும் பிரச்னையா? உடனே போனை எடுங்க.. 181க்கு கால் பண்ணுங்க!
RP Udhayakumar: எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சில் சட்டப்பேரவை ஆடிப் போய்விட்டது - ஆர்.பி. உதயகுமார்
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Watch Video: செம்ம கட்! அசத்தலான பந்து வீச்சில் அசால்ட் செய்த அருந்ததி ரெட்டி! - வீடியோ
Embed widget