மரியாதையாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் - ஆர்.எஸ். பாரதி
பிரதமர் முதலில் அமித்ஷாவை வைத்து பேச வைப்பார். ரியாக்சன் பார்த்து விட்டு பிறகு அவரே பேசுவார். மரியாதையாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்.
அமித்ஷா கருத்துக்கு ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டம் மீதான விவாதத்தின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கரின் புகைப்படம் வைத்த பதாகைகளுடன் ஆண்கள், பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆர். எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில் ;
பிரதமர் முதலில் அமித்ஷாவை வைத்து பேச வைப்பார். ரியாக்சன் பார்த்து விட்டு பிறகு அவரே பேசுவார். அமித்ஷா மோடி ஆகியோர் அக்கட்சியின் மூலதனம். மோடியின் கருத்தை தான் அமித்ஷா சொல்லி உள்ளார் என்பது என்னுடைய கருத்து.
தமிழ்நாட்டில் இருந்து ஒரு போராட்டம் தொடங்கினால் அது வெற்றி பெறும் என்பது சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்து பல உதாரணங்கள் உண்டு.
அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்
மரியாதையாக அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும். உணர்வுகளை மதிக்க கூடியவராக ஜனநாயகத்தில் மோடிக்கு குறைந்த பட்சம் ஆறு மாதமாவது அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்கி வைப்பது தான் தார்மீகமாக மக்களை மதிப்பதற்கு அடையாளம்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்கு உள்ளே விடாமல் இருந்தது தொடர்பான கேள்விக்கு ,
அழிவுக்கு ஆரம்பம். ராகுல் காந்தி பாரம்பரியம் என்ன?. மோடி, அமித்ஷா பாரம்பரியம் என்ன? என்பது ஊர் உலகத்திற்கே தெரியும். அவர்கள் செய்த தியாகத்தால் தான் பாராளுமன்றமே இருக்கிறது. இந்தியாவிற்கே சுதந்திரம் வாங்கி கொடுத்த அந்த குடும்பத்தால் தான் மோடி உள்ளே போய் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அவரையே உள்ளே விடமாட்டோம் என்று சொல்கிறார்கள் அடுத்து நம்மையும் உள்ளே விட மாட்டோம் என்று சொல்வார்கள்.
அம்பேத்கர் ஏழை எளிய மக்களின் கண்களை திறந்தவர். மதத்திற்கு எதிராக அம்பேத்கருடைய கருத்துக்கள் அமைந்திருக்கிறது என்பதால் அம்பேத்கரையும் , அவர் கருத்துக்களையும் அழிக்க பார்க்கிறார்கள் என அவர் கூறினார்.