Traffic New Rules : வாகன ஓட்டிகளே உஷார்..! இன்று முதல் அமலுக்கு வருகிறது புதிய அபராதம்..! ஒழுங்கா ஓட்டுனா தப்பிக்கலாம்..
போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இன்று முதல் புதிய அபராதம் வசூலிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் எப்போதும் போக்குவரத்து பரபரப்பாக காணப்படுகிறது. இந்த சூழலில், சிலர் போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவதால் மற்ற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு பல மடங்கு அபராதத்தை அதிகரித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பின்படி. போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களுக்கு இன்று முதல் புதிய அபராத தொகை வசூலிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.
- 2 மற்றும் 4 சக்கர வாகனங்களில் வேகமாக செல்வது – முதல் முறை ரூபாய் 1000, ஒரு முறைக்கு மேல் ரூபாய் 10 ஆயிரம்
- 2 மற்றும் 4 சக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுவது – முதல் முறை ரூபாய் 15 ஆயிரம், ஒரு முறைக்கு மேல் ரூபாய் 25 ஆயிரம்
- 2 சக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் சைலன்சர் மாடிபிகேஷன் – ரூபாய் 1000
- சிக்னல் விதிமீறல் – ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை
- நிறுத்தற் கோடுகள் விதிமீறல் – ரூபாய் 500 முதல் ரூபாய் 1500 வரை
- உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள் – ரூபாய் 1000 முதல் ரூபாய் 2 ஆயிரம் வரை
- மியூசிக்கல் ஹார்ன், ஏர் ஹார்ன் –ரூபாய் 500 வரை
- வாகன பதிவு இல்லாமல் வாகனம் இயக்குவது – ரூபாய் 2500 முதல் ரூபாய் 5 ஆயிரம் வரை
- லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்குவது – ரூபாய் 5 ஆயிரம்
- போன் பேசிக்கொண்டே வாகனங்கள் இயக்குவது- முதல் முறை ரூபாய் 1000, ஒரு முறைக்கு மேல் ரூபாய் 10 ஆயிரம்
- கார் மற்றும் கனரக வாகனங்களில் காற்று மாசு – ரூபாய் 10 ஆயிரம்
- 2 சக்கர வாகனங்களில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டுவது – ரூபாய் 2 ஆயிரம் முதல் ரூபாய் 4 ஆயிரம் வரை
- ஹெல்மெட் அணியாமல் 2 சக்கர வாகனம் ஓட்டுவது – ரூபாய் 500
- பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் செல்வது – ரூபாய் 500
- மது குடித்து வாகனம் ஓட்டுவது – ரூபாய் 10 ஆயிரம்
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த புதிய அபராதம் இன்று முதல் வசூலிக்கப்பட உள்ளது.
மேலும் படிக்க : Chennai Air pollution: தீபாவளி கொண்டாட்டம் : படுமோசமான நிலையில் சென்னை.. உச்சத்துக்கு சென்ற காற்று மாசுபாடு..!
மேலும் படிக்க : Chennai Metro : சென்னையில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் மெட்ரோ இரயிலில் பயணம்..! புதிய சாதனை...