" மக்கள் நூலகம் திறப்பு " மாணவர்கள் , இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு ஒரு புதிய பாதை !!
மாணவர்கள் , இளைஞர்கள் அறிவு திறன் வளர்ச்சிக்காக மக்கள் நூலகம் திறந்து வைத்த பொதுமக்கள்

நூலகம் அமைக்க கோரிக்கை
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும் , இளைஞர்களும் பயன்பெறும் வகையில் நூலகம் ஒன்று அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சமூக ஆர்வலர் சையத் அலிகானிடம் ஆலோசனை செய்தனர்.
ஆலோசனையின் படி , கொடுங்கையூர் 4 வது மற்றும் 5 வது பிளாக் சந்திப்பில் உள்ள பூங்கா வளாகத்தில் " மக்கள் நூலகம் " என்ற பெயரில் நூலகம் அமைக்கப்பட்டது. இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பொதுமக்களும் , சமூக ஆர்வலர் சையத் அலிகானும் இணைந்து அமைத்துள்ளனர்.
இந்நூலகத்தை புளியந்தோப்பு காவல் மாவட்ட காவல் உதவி ஆணையர் சரவணன் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக கொடுங்கையூர் சட்டம் & ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி மற்றும் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நூலகத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.
இந்நிகழ்வில் பேசிய காவல் துறை உயரதிகாரிகள் ;
தற்போதைய காலக் கட்டத்தில் பள்ளி , கல்லூரி மாணவர்கள் போதை பொருட்கள் எடுத்து கொள்ளும் கெட்ட பழக்கம் உள்ளது. இந்த பழக்கத்தில் இருந்து விடுபட மாணவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் அவ்வாறு புத்தகம் படிக்கும் போது போதைப் பொருட்கள் பயன்பாடு என்பது கவனம் மாறும். பொது மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். நூலகம் மக்களின் அறிவு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















