Chennai Metro : சென்னையில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் மெட்ரோ இரயிலில் பயணம்..! புதிய சாதனை...
CMRL Record: சென்னை மெட்ரோ இரயிலில் ஒரே நாளில் 2.63 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டது புதிய சாதனையாக பதிவாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் ஒருநாளில் அதிகப்பட்சமாக 2.63 லட்சம் பேர் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் பயணத்திற்கு மெட்ரோ ரயிலை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை இந்தாண்டு ஜனவரி முதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்படுள்ளது.
நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க பெரும்பாலான மக்களின் தேர்வாக இருப்பது மெட்ரோ ரயில் சேவை. இந்நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று (21.10.2022) மட்டும் 2,63,610 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்துள்ளது புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. தீபாவளி பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர் செல்ல அன்றைய தினம் வழக்கத்தை காட்டிலும் அதிகளவில் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட் வேகத்தில் உயர்ந்த பயணிகளின் எண்ணிக்கை:
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (21.10.2022) அன்று மெட்ரோ இரயிலில் பயணித்தவரகளின் எண்ணிக்கை 2,63,610 பேர் பயணம் செய்துள்ளனர். இதில், புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து 22,383 பேர், திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து 14,106 பேர், கிண்டி மெட்ரோ இரயில் நிலையத்தில் இருந்து 14, 142 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
S.No. | Date | Total Number Of Passengers Travelled |
1 | 03.01.2022 | 1,35,977 |
2 | 28.02.2022 | 1,43,252 |
3 | 28.03.2022 | 2,10,634 |
4 | 25.04.2022 | 1,74,475 |
5 | 26.05.2022 | 1,91,720 |
6 | 03.06.2022 | 2,02,456 |
7 | 27.07.2022 | 1,97,307 |
8 | 29.08.2022 | 2,20,898 |
9 | 30.09.2022 | 2,46,404 |
10 | 20.10.2022 | 2,48,556 |
மெட்ரோ டிக்கெட் சலுகை:
சென்னை மெட்ரோ இரயில் பயணிக்க கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மொபைலில் க்யூ.ஆர். கோட் மூலம்
(Mobile QR Code (Single, Return, Group Ticket and Q.R. Trip Passes)) டிக்கெட் எடுப்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது. மெட்ரோ டிராவல் அட்டைகள் (Metro Travel Cards) மூலம் பயணம் செய்பவர்களுக்கும் பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகை அளிக்கப்படுகிறது.
மெட்ரோ டிராவல் கார்டு:
மெட்ரோ ரயிலில் மக்கள் அதிகம் பயணிக்கும் நேரங்களில் டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்க பயணிகள் மெட்ரோ கார்டுகளை பயன்படுத்தலாம். ரூ. 50 டெபாசிட் தொகை செலுத்தி (Non Refundable) மெட்ரோ கார்டுகளை பெறலாம். இதில் அதிகப்பட்ச தொகையாக உங்கள் விருப்பப்படி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். மெட்ரோ கார்டை பயன்படுத்தி பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா காலத்திற்கு பிறகு மெட்ரோவில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் இந்த ஆண்டு மட்டும் 4 கோடி பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மெட்ரோ இரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்கப்படுகிறது. அலுவலக நேரங்களில் காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும், சாதாரண நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகிறது.