மேலும் அறிய

Chennai Train: மக்களே இதை கவனிங்க! ஆகஸ்ட் 27 முதல் இந்த பாதையில் பறக்கும் ரயில் சேவை ரத்து...ஷாக் கொடுத்த சென்னை ரயில்வே!

சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Chennai Train: 4ஆம் வழித்தடம் அமைக்கும் பணிகளுக்காக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே வரும் 27ம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

ரயில் சேவை:

சென்னையின் உள்புறமும், புறநகரங்களில் இருந்து சென்னைக்குள் வருவதற்கும் மின்சார ரயில்களின் போக்குவரத்து சேவை மிகவும் தவிர்க்க முடியாதவையாக இருந்து வருகிறது. சென்னையில் புறநகர் ரயிலில் தினசரி லட்சக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரத்திற்கும், தாம்பரத்தில் இருந்து சென்னைக்கும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

அதேபோன்று சென்னை கடற்கரை-எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும், கடற்கரை-மயிலாப்பூர், கடற்கரை-வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை உள்ளது. இதற்கிடையில், வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோல, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே நான்காவது வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்பட உள்ளது.  

பறக்கும் ரயில் சேவை ரத்து:

சென்னை கடற்கரை முதல் சிந்தாரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயல்வே கோட்டம் அறிவித்துள்ளது. 3.53 கிலோ மீட்டர்  இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இந்த வழித்தடத்தில் வரும் 26ஆம் தேதி வரை ரயில்கள் இயக்கப்படும் என்றும் அதன் பிறகு 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு இணை நடவடிக்கையாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு வேறு வழிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். சென்னை கடற்கரை-எழும்பூர் இடைய நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 

National Film Awards 2023 LIVE: 69வது தேசிய விருதுகள்...இந்த ஆண்டு எந்தெந்த படங்களுக்கு வாய்ப்பு?

பாரதியார் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேச வாய்ப்பளிக்காத ஆளுநர் - நடந்தது என்ன..?

 

தலைப்பு செய்திகள்

TN Weather News: சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை - காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை - தமிழக வானிலை அறிக்கை
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
மக்களே உஷார்! மிக கனமழை எச்சரிக்கை - எங்கு எப்போது மழை பெய்யும்? முழு விவரம்!
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"என் வீட்டுக்குள் நீ என்ன பண்ற?" தவெக பிரமுகரையும் மனைவியையும் வீட்டில் பூட்டி வீடியோ எடுத்த கணவர்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Embed widget