Kosasthalaiyar River:கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - திருவள்ளூர் கலெக்டர் அறிவிப்பு!
Kosasthalaiyar River : கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து இன்று இரவு தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/Dsr8kSAiSg
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 13, 2022
ஏரி நிலவரம்
மாண்டஸ் புயலின் எதிரொலியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது, குறிப்பாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து எதிரொலியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து முதல் கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்பொழுது ஏரிக்கு நீர்வரத்து 1924 கன அடி. ஏரியின் நீர்மட்டம் 22.42 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று 3000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், மழை பெய்வது குறைந்துள்ள காரணத்தினாலும், நீர்வரத்து சற்று குறைந்துள்ள காரணத்தினாலும் 1500 கன அடி நீர் குறைக்கப்பட்டு, தற்போது 1,600 கன அடி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.
கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்