Godrej TN Plant: ரூ.515 கோடி முதலீடு..! முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை, மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட் - உற்பத்தி விவரங்கள்?
Godrej TN Plant: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.515 கோடி முதலில் கட்டப்பட்டுள்ள கோத்ரேஜ் நிறுவன ஆலை மூலம், மூன்றாம் பாலினத்தவர்கள் உட்பட 1010 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Godrej TN Plant: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் ஆலை, கோத்ரேஜ் நிறுவனத்தின் முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் காணும் செங்கல்பட்டு
சமவளர்ச்சி என்பதே தமிழ்நாடு அரசின் இலக்கு என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியயுறுத்தி வருகிறார். அந்த வகையில் சென்னை தாண்டி அனைத்து மாவட்டங்களிலும், வளர்ச்சியை நோக்கிய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னையை சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக உற்பத்தி மையமாக விளங்கி வரும், செங்கல்பட்டில் ஆலையை அமைக்க பல நிறுவனங்களும் அர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தான், கோத்ரேஜ் நிறுவனத்தின் நுகர்வோர் பொருட்களுக்கான உற்பத்தி ஆலையும் செங்கல்பட்டில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இது மாவட்டத்தின் மேம்பாட்டிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாக திகழும் என நம்பப்படுகிறது.
நாட்டின் முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை
புதிய ஆலைக்கான கோத்ரேஜ் மற்றும் தமிழ்நாடு அரசு இடையேயான ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு கையெழுத்தானது. தொடர்ந்து, 2024 ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டின் போது அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் விளைவாக 515 கோடி ரூபாய் பட்ஜெட்டில், ஒரே ஆண்டில் கோத்ரேஜின் புதிய ஆலை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதனை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த ஆலை, கோத்ரேஜ் நிறுவனத்தின் முதல் பல்பொருள் உற்பத்தி ஆலை என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பாலினத்தவருக்கு ஜாக்பாட்:
கோத்ரேஜின் புதிய ஆலை மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரத்து 10 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன. அதில் 50 சதவிகிதம் பேர் பெண்கள் எனவும், மாற்றுதிறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு (LGBTQ) 5 சதவிகிதமும் வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்படும் என கோத்ரேஜ் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்தகைய திட்டத்தை அந்நிறுவனம் செயல்படுத்துவது இதுவே முதல்முறை. பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு என சுமார் 55 சதவிகித வேலைவாய்ப்புகள் ஒதுக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உற்பத்தி பொருட்கள்:
நுகர்வோருக்கான தினசரி பயன்பாட்டு பொருட்களை உற்பத்தி செய்வதி கோத்ரேஜ் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய ஆலையில், சிந்தால் சோப்பு, கோத்ரேஜ் எக்ஸ்பேர்ட் ரிச் க்ரீம், ஷாம்பு ஹேர் கலர், குட்நைட் மற்றும் டியோடரண்ட் என அந்நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ளன. அந்நிறுவனம் மொத்தம் சுமார் 9 பொருட்களை சந்தையில் விற்பனை செய்து வரும் நிலையில், அதில் சுமார் 7 பொருட்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட உள்ளன. உள்நாட்டி சந்தைக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இங்கிருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கலங்கரை தொழிற்சாலைகள்:
கலங்கரை தொழிற்சலை அதாவது முன்மாதிரியான தொழிர்சாலையாக, கோத்ரேஜ் நிறுவனம் இதனை வடிவமைத்துள்ளது. கலங்கரை விளக்க தொழிற்சாலைகள் என்பது செயல்பாடுகளை மேம்படுத்தவும் நிலைத்தன்மை இலக்குகளை அடையவும் தொழில் 4.0 தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வசதிகள் மற்றும் மதிப்புச் சங்கிலிகளின் சமூகமாகும்.
அதன்பட், சோப்புகளை அட்டைப் பெட்டிகளில் பேக் செய்வது போன்ற பல பணிகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், குட்நைட் இயந்திரங்கள் கடந்த காலங்களில் பணியாளர்களால் அசெம்பிள் செய்யப்பட்டன, ஆனால் புதிய தொழிற்சாலையில் அதை தானியங்கி முறையில் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.






















