மேலும் அறிய

சென்னை சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியாவில் இருந்து வந்த ஆதரவு குரல்!

சென்னையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்களுக்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு கொரிய சாம்சங் தொழிலாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை சாம்சங் தொழிலாளர்களின் தைரியமான முடிவிற்கு ஆதரவு அளிப்பதாகவும், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் போது அவர்களுக்கு எங்கள் உரிமை பாட்டை தெரிவிப்போம் என கொரிய சாம்சங் யூனியன் சங்கத் தலைவர் சா, உ மாக் சி.ஐ டி.யூவிற்கு தனது ஆதரவை கடிதம் மூலமாக தெரிவித்துள்ளார்.

சென்னை தொழிலாளர்களுக்கு கொரிய தொழிலாளர்கள் ஆதரவு:

இந்த விவகாரத்தில் கொரிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் சார்பில் எழுதப்பட்ட கடிதத்தில், "தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு (SIWU) தன் ஆழமான ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது.

இந்தியாவில் சென்னைக்கு அருகே உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஹோம் அப்ளையன்சஸ் நிறுவனத்தில் நடந்து கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தம் சங்கத்தை அங்கீகரிப்பது, சம்பள உயர்வு, வேலை நேரத்தில் முன்னேற்றம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறுகிறது. இது ஒவ்வொரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும்.

உங்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் ஜூலை 8ந் தேதி நடைபெற்றது என்று கேள்விபட்டோம். அதே தினத்தில் தான் எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தம் கொரியாவில் தொடங்கியது. உங்கள் சங்கம் தொடங்கிய அன்றே எங்களுக்கு ஆதரவாக நீங்கள் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறீர்கள்.

உங்கள் சங்கத்தின் பொதுக்குழுவும், எங்கள் சங்கத்தின் முதல் பொதுவேலைநிறுத்தமும் ஒரே தினத்தில் தொடங்கியிருப்பது தற்செயல் ஆனதல்ல. நாம் வெவ்வேறு நாடுகளில் இருக்கிறோம். வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம். நமது ஊழியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நாம் உறுதிபூண்டிருக்கிறோம். அந்த வகையில் நாம் தோழர்களாக இணைந்திருக்கிறோம்.

ஒரு சர்வதேச நிறுவனம் என்கிற முறையில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எங்கு செயல்பட்டாலும் தொழிலாளர்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டும். அந்த பொறுப்பை அது மதித்து நடக்க வேண்டும்.

ஆனால், மிகவும் வருந்தத்தக்க வகையில் இந்திய நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம். வழங்கப்படவில்லை. நியாயமான வேலை நிலைமைகள் இல்லை. சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கமும், சிஐடியுவும் தலைமை தாங்கி நடத்துகிற இந்த வேலைநிறுத்தம் இந்திய தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சட்டப்படியான போராட்டம். சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்த பிரச்சனையை நேர்மையாகவும், விரைவாகவும் தீர்த்து வைக்க வேண்டுமென்று கோருகிறோம்.

தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சங்கம் இல்லா கொள்கையை எதிர்க்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget