மேலும் அறிய

தயவுசெஞ்சு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்க.. அமைச்சர் அன்பரசன் பேச்சு

கருவுற்ற தாய்மார்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு புரியாத வடமொழி பெயர்களை தவிர்த்து அழகான தமிழ் பெயர்களை வைக்க வேண்டும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் அன்பான வேண்டுகோள் விடுத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு  விழா குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் செவிலிமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார் ஆகியோர் கருவுற்ற தாய்மார்களுக்கு நலங்க வைத்து ஆரத்தி எடுத்து சீமந்த விழா நடத்தினர். 

தயவுசெஞ்சு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்க.. அமைச்சர் அன்பரசன் பேச்சு
 
பின் விழா மேடையில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கருவுற்ற தாய்மார்கள்  அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் உங்களுக்கு பிறக்கும்  குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரினை சூட்ட வேண்டும், முன்பு எல்லாம் பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரில் பெயர் சூட்டி உள்ளனர்.
 

தயவுசெஞ்சு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்க.. அமைச்சர் அன்பரசன் பேச்சு
அந்த  பெயர்கள் எல்லாம் கடவுள் பெயர்களாகவோ, அழகான தமிழ் பெயர்களாகவோ இருந்து உள்ளது. ஆனால் தற்போது வடமொழி கலந்த பெயரேயா அல்லது புரியாத பெயரேயோ வைக்கின்றனர். ஆகவே இனி பிறக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்கள் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர், எழிலரசன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன், துணை தலைவர் நித்தியா சுகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தயவுசெஞ்சு குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வையுங்க.. அமைச்சர் அன்பரசன் பேச்சு
 
செங்கல்பட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கர்ப்பிணி தாய்மார்களுக்கான  சமுதாய வளைகாப்பு விழாவினை  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர்தா.மோ.அன்பரசன்  தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 2450 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு விழா நடத்தப்படவுள்ளது.  முதற்கட்டமாக காட்டாங்கொளத்தூர் வட்டாரத்தைச் சார்ந்த 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா இன்றைய தினம் கூடுவாஞ்சேரியில் நடத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1266 குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றன.  இம்மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரை 55391 குழந்தைகள், 8878 கர்ப்பிணி தாய்மார்கள், 6909 பாலூட்டும் தாய்மார்கள் பதிவு செய்யப்பட்டு இணை உணவு வழங்கப்படுகின்றது. 2 முதல் 5 வயது வரை உள்ள 24,186 குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியுடன் மதிய உணவு (ம) 3 நாட்களுக்கு முட்டை வழங்கப்படுகிறது. பிறந்தது முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் மாதாமாதம் எடை (ம) உயரம் எடுத்து அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தைகள் மையத்தில் பயனாளிகள் கர்ப்பிணி தாய்மார்கள் நலனை வலியுறுத்தும் வகையில் வருடம் தோறும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா அரசு மூலம் நடத்தப்படுகிறது. 

கர்ப்பம் என்று தெரிந்தவுடன் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் மையத்தில் பதிவு செய்து கொண்டு, குழந்தைகள் மையத்தில் வழங்கும் இணை உணவு பெற்றுக் கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும். இரும்பு சத்து, போலிக் அமிலம் (ம) சுண்ணாம்பு சத்து மாத்திரைகள் தவறாமல் உட்கொள்ளுதல் வேண்டும். பிறக்கும் குழந்தை 2.5 கிலோ எடையுடன் பிறக்கும்,  தாய் இரத்த சோகையால் பாதிக்கப் படாமல் இருக்கும் தினமும் சரிவிகித சத்தான உணவு (ம) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்.

குழந்தை பிறந்த ½மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 6 மாதகாலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 7 மாதம் முதல் தாய்ப்பாலுடன் இணை உணவு வழங்க வேண்டும். கர்ப்பகால மற்றும் பாலூட்டும் காலத்தில் தாய் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். இதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்க வாழ்த்துக்கள். மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் பெற்றெடுக்கும் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர் சூட்ட வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என  குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை  அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? GST சாலை முதல் வேளச்சேரி வரை புதிய திட்டம்!
சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி? GST சாலை முதல் வேளச்சேரி வரை புதிய திட்டம்!
Kilambakkam: அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
அடுத்த பிரச்னை ஓவர்..! இனி கிளாம்பாக்கத்திற்கு ஈசியா ரயிலில் போகலாம் - ரயில் இணைப்பில் அப்க்ரேட்
TN Weather News: 9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
9 மாவட்டங்களில் இன்று கனமழை பொளக்க போகுது..! சென்னை? தமிழக வானிலை அறிக்கை
"மேயர் ஏன் வரலன்னு , அவங்கக்கிட்ட கேளுங்க" முகாமில் எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் அதிரடி பதில்

வீடியோ

பூண்டி ஏரி பணியில் ஊழல்? முதல்வர் PA பெயரை பயன்படுத்தி முறைகேடு! நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Results LIVE: தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் மீண்டும் தவெக முன்னிலை.! 2ஆம் இடத்திற்கு சென்ற அதிமுக
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
தாராபுரத்தில் ட்விஸ்ட்.! முன்னிலையில் அதிமுக- தவெக ஷாக்
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Madurantakam By-Election Results: முதல் சுற்றில் மரகதம் குமரவேல் முன்னிலை! இரண்டாம் இடம் யாருக்கு?
Cancer Drugs: அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
அடடே..! மலிவாகும் புற்றுநோய் சிகிச்சை - 70% வரை குறையும் மருந்துகளின் விலை - அதிரடி உத்தரவு
TN By Election: கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
கூடுதல் பலமா? புது நெருக்கடியா? தாராபுரம், மதுராந்தகம் தேர்தல் முடிவு - சூடான அரசியல் கணக்குகள்
TN By Election Result 2026: தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
தாராபுரம், மதுராந்தகத்தில் வெற்றி யாருக்கு? இன்று வாக்கு எண்ணிக்கை! மக்கள் யார் பக்கம்?
Upcomig Cars: மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
மொதமுறையா..! EV, ஹைப்ரிட்டை களமிறக்கும் ஹோண்டா, ரெனால்ட் - பெரிய SUV-க்கள் எப்படி?
IAS Transfer: உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
உள்துறை செயலாளர் மாற்றம்..! IAS அதிகாரிகளை கலைத்து போட்ட CM விஜய் - தமிழக அரசு புதிய உத்தரவு
Embed widget