மேலும் அறிய

World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

பிற மாவட்டங்களை விட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாகவே இருந்து வருகிறது . இத்தகைய சூழ்நிலையில் மரங்கள் மற்றும் காடுகள் வளர்த்தல் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது .

பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் இருந்தாலும் நமது பூமியை போல் மனிதர்கள் மற்றும் அனைத்து வகையான ஜீவராசிகள் வாழ்வதற்கு தகுதியான கோளினை இதுவரை எவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.  


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

நமது பூமி நிலம் , நீர் , நெருப்பு , ஆகாயம் மற்றும் காற்று ஆகிய  பஞ்சபூதங்களை அடக்கிய மாபெரும் பிரபஞ்ச சக்தியை உள்ளடக்கி இருந்தாலும் நமது பூவின் தட்பவெட்ப நிலையை சமமாக வைத்திருப்பதற்கு மரங்கள் பெரும் பங்கை அளிக்கின்றன . தொழிற்சாலைகள் அதிகரிப்பு, பருவநிலை  மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் புவி வெப்பமயமாகி உலகில் பல்வேறு பேரழிவுகள் நடக்கின்றன . 

புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தவே   உலக சுற்றுச்சூழல் நாள் (World Environment Day, WED) ஐக்கிய நாடுகள் அவையால் ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது . உலக சுற்றுச்சூழல் நாளை முன்னிட்டு இன்று திருப்பத்தூர் மாவட்ட மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு லட்ச விதை பந்துகளை , வன பகுதிகளில் விதைக்கப்பட்டது . இது குறித்து நம்மிடம் பேசிய விதை பறவைகள் இளைஞர் மன்றத்தின் செயலாளர் சிவராஜ் , திருப்பத்தூர் மாவட்டம் தும்பேரி கிராமத்தில் உள்ள அண்ணா நகரை தலைமை இடம் ஆக கொண்டு விதை பறவைகள் இளைஞர் மன்றம் கடந்த ஒரு ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

இந்திய அரசு இலய்யங்கார் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த மன்றத்தில் , தும்பேரி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள் மட்டும் , வாணியம்பாடியில் இயங்கிவரும் ஹிந்து மேல்நிலை பள்ளி மாணவர்கள் என ஒன்றாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் 168 மாணவர்கள்  இந்த மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளனர் .

புவி வெப்பமயமாதலை குறித்து பல விழிப்புணர்வுகளை திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து செய்துகொண்டு இருந்தாலும் , இந்த கொரோனா ஊரடங்கால்  பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் , எங்கள் மன்ற மாணவர்களை முன்மாதிரியாக வைத்து நாட்டில் உள்ள அணைத்து மாணவர்களுக்கும் சுற்றுசூழல் குறித்தும் அழிந்துவரும் காடுகளை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்து , 10  லட்சம் விதை பந்துகள் தயாரிக்க முடிவு செய்தோம் . எனினும் கொரோனா தொற்றின் தாக்கத்தால் வெறும் 40 மாணவர்கள் மட்டுமே விதை பந்துகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர் .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

40 மாணவர்கள் மட்டுமே பங்குபெற்றாலும் மே ஒன்றாம் தேதி ஆரம்பித்த தயாரிப்பு பணி , மே 20 ஆம் தேதி அன்று மாணவர்கள் பங்களிப்பால் ஒரு லட்சம் விதை பந்துகள் தயாரித்து ஒரு சாதனையை படைத்துள்ளனர் . மாணவர்கள் தயார்செய்த இந்த ஒரு லட்சம் விதைப்பந்துகளை இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.ப.சிவன்அருள் அவர்கள் தலைமையில் ஏலகிரி மலைப்பகுதியில் இன்று விதைக்கப்பட்டது .


World Environment  Day : 20  நாட்களில் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த ஒரு லட்சம் விதை பந்துகள்!

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் , மாணவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார் . பிற மாவட்டங்களை விட வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாகவே இருந்து வருகின்றது . இத்தகைய சூழ்நிலையில் மரங்கள் மற்றும் காடுகள் வளர்த்தல் அவசியமான ஒன்றாக கருதப்படுகின்றது .

மேலும் மாணவர்களின் இந்த அரும்பணிக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கீகரிக்கும் வகையில் விரைவில் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார் .

தலைப்பு செய்திகள்

ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget