மேலும் அறிய

Chennai Metro: நாளை முதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்; எவ்வளவு நேர இடைவெளி? கடைசி மெட்ரோ எப்போது ?

Chennai Metro Train: கூடுதலாக மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

சென்னைக்கு நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், நாளை மறுநாள் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளதால், அதிக பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணிக்க வாய்ப்பு உள்ள நிலையில், வரும் 15, 16,17 ஆகிய தேதிகளில் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக மெட்ரோ நிரிவாகம் தெரிவித்துள்ளதாவது 

கனமழையின் காரணமாக, பயணிகளின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்

​சென்னை வானிலை ஆய்வு மையம், சென்னையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், கனமழை நேரத்தில் சென்னை மக்களுக்கு தடையற்ற போக்குவரத்தை அளிக்கும் வகையில் கூடுதலாக மெட்ரோ இரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

மெட்ரோ இரயில் சேவை நேரம்:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். (முதல் மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ இரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும்).

• காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை:

➢ பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 5 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
➢ நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை6 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.
➢ நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

• காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8மணி முதல் 10 மணி வரை:

பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்

• இரவு 10 மணி முதல் 11 மணி வரை:

பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும்.

கூடுதலாக மெட்ரோ இரயில்கள் இயக்கப்படுவதால், பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில் சேவைகள் மேற்கண்ட நாட்களில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. பச்சை வழித்தடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோவில் மாறி விமான நிலையம் மெட்ரோவுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இருப்பினும், மேற்கூறிய அட்டவணைகள் அனைத்தும் வானிலை நிலையைப் பொறுத்து வழக்கமானசேவைக்கு மாற்றியமைக்கப்படும்.

முந்தைய அனுபவத்தின்படி, கனமழை காரணமாக தண்ணீர் தேங்கும் வாய்ப்புள்ள மெட்ரோ இரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்களில் (குறிப்பாக பரங்கிமலை மற்றும் அரும்பாக்கம் மெட்ரோ) பயணிகள் தங்கள் வாகனங்களை 15.10.2024 முதல் 17.10.2024 வரை நிறுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். (தேவைப்பட்டால் வானிலை நிலையைப் பொறுத்து தேதிகள் பின்னர்அறிவிக்கப்படும்).

​மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Kasthuri: ஐஸ்வர்யா ராய்க்கே டஃப் கொடுத்தவர் கஸ்தூரி! இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Embed widget