சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35% உயர்கிறது - தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை மாநகராட்சியில் தொழில் வரியினை 35% உயர்த்தவும், இதற்கு அரசு ஒப்புதல் வழங்கவும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்..
![சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35% உயர்கிறது - தீர்மானம் நிறைவேற்றம் Business commercial tax increases by 35% in Chennai Corporation - resolution passed சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35% உயர்கிறது - தீர்மானம் நிறைவேற்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/31/6ac992823a60c3d2302adfef307c36511722407215890184_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 A-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவுகள் 274-288ல் தொழில்வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஓவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொழில் வரி விகிதங்கள் திருத்தி அமைக்கலாம் எனவும் அத்தகைய திருத்தம் 25%க்கும் குறைவில்லாத வகையிலும் 35%க்கும் மிகாமலும் இருக்க வேண்டும்,தொழில் வரி விதிகம் 2500 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35% தொழில்வரி உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும், 6 மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் 21 ஆயிரம் ரூபாய்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை, 21 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி 135 ரூபாயிலிருந்து 180 ரூபாயாகவும், 30 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு 315 ரூபாயில் இருந்து 430 ரூபாயாகவும், 45 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை உள்ள நபர்களுக்கு 690 ரூபாயாக இருந்த வரி 930 ரூபாயாக உயர்த்திட தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மேலும் தொழில் வரி விகிதத்தை திருத்துவது குறித்து மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பவும் மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தொழில் வரி உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர் என்பத்ய் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு தரப்பினர் சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்வுக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)