மேலும் அறிய

College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்; சிறப்புப் பிரிவினருக்கு இன்று தொடங்கிய கலந்தாய்வு..

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. 

163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்று (ஆகஸ்ட் 5) தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் வழக்கமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான வகுப்புகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் தொடங்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக இதுவரை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்படாமல் இருந்தது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பள்ளிகள், கல்லூரிகள் முழுமையாக இயங்காமல் இருந்ததும் முக்கியக் காரணமாக இருந்தது.

இதற்கிடையே கடந்த ஜூலை 19-ம் தேதி 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணியைத் தொடங்க மாநில அரசு தீவிரம் காட்டியது. இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்கம் தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவை ஜூன் 22ஆம் தேதி தொடங்கியது. மாணவர்கள் https://tngasa.org/https://tngasa.in/ என்ற இணையதள முகவரிகளில்‌ முன்பதிவு செய்தனர்.

College Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரலாம்; சிறப்புப் பிரிவினருக்கு இன்று தொடங்கிய கலந்தாய்வு..

இந்த நிலையில் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. 

இணையதள வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணாக்கர்கள்‌ கல்லூரி உதவி மையங்கள் மூலம்‌ விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டது. இம்மையங்களின்‌ பட்டியல்‌ மேற்குறித்த இணையதள முகவரியில்‌ வெளியிடப்பட்டது. அனைத்து மையங்களிலும்‌ போதிய அளவில்‌ கொரோனா தடுப்பு மற்றும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர சிறப்புப் பிரிவினருக்கு இன்று கலந்தாய்வு தொடங்கி உள்ளது. விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்குக் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆன்லைன் முறையில் அல்லாமல், நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. 

அந்தந்தக் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் தற்போது கலந்தாய்வு தொடங்கி உள்ளது.  

சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உள்ள 1,106 இடங்களுக்கு 95,136 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கே நூற்றுக்கணக்கானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget