நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் காலமானார்

கொரோனாவுக்கு மேலும் ஒரு தமிழ் நடிகர் காலமானார். அதிர்ச்சியில் திரையுலகம்.

FOLLOW US: 

நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் காலமானார். சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வெங்கட் சுபா சென்னையில் உள்ள தனியார் அனுமதிகப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

வெங்கட் சுபா மொழி, கண்டநாள் முதல், அழகிய தீயே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும், டிவி தொடர்களில் நடித்துள்ள அவர் டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் படங்களை விமர்சனம் செய்து வந்தார். இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலையால் பல மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு, உயிரிழப்புகள் அதிகரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்று பாதிப்பு திரையுலகை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. 

https://tamil.abplive.com/news/tamil-nadu/nitish-veera-death-tamil-actor-nitish-veera-dies-of-corona-infection-3375

கடந்த சில தினங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, நெல்லை சிவா, நடிகர் மாறன், நடிகர் பவுன்ராஜ், நடிகர் ஐய்யப்பன் கோபி, சீரியல் நடிகர் குட்டி ரமேஷ் ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், நடிகர் நிதிஷ் வீராவின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சிலர் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்திருந்தாலும், பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநரும், நடிகருமான அருண்ராஜா காமராஜாவின் மனைவியும் கொரோனாவுக்கு பலியானார்.
நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் காலமானார்

கொரோனா தொற்று நோயை எதிர்த்து நாடு தொடர்ந்து போராடி வரும் நிலையில் , பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வை , அதிகாரிகள் விழிப்புணர்வு மற்றும் பல வழிகாட்டுதலை மக்களுக்கு வழங்கி வருகின்றனர் . பல நிறுவனங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த தங்கள் முயற்சியைச் செய்து வருகின்றனர், மேலும் பல பிரபலங்களும் தொடர்ந்து தங்களின் சமூக ஊடக பக்கங்களில் விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டைச் சேர்ந்த சில பிரபலங்களும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதற்காக ரோட்டரி கிளப்புடன் கைகோர்த்து சமீபத்தில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான வீடியோ ஒன்றை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Corona Virus tamil cinema Actor Venkat Suba death corona

தொடர்புடைய செய்திகள்

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட 100 கோடிக்கு டெண்டர்!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

130 அடி போர்வெல் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்ட தமிழ்நாட்டு ஐ.பி.எஸ் அதிகாரி முனிராஜ்..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணிவழங்க வைகோ கோரிக்கை..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

கும்கி யானைகளுக்கு கொரோனா இல்லை : பரிசோதனை முடிவுகளால் வனத்துறை நிம்மதி..!

மயிலாடுதுறை: "தமிழ்நாட்டை ஒரு மாதத்தில் முன்னேற்றி கொண்டு வந்துள்ளோம்" - அமைச்சர் எம்.ஆர்.கே‌.பன்னீர்செல்வம்.

மயிலாடுதுறை:

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : மகாராஷ்ட்ராவில் இன்று 9,350 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!