Bubble Face Mask : முகப்பொலிவுக்கு ரொம்ப மெனக்கிடுறீங்களா? பபுள் ஃபேஸ் மாஸ்க் ஒரு சூப்பரான வரம்..
ஃபேஸ் ஸ்க்ரப்பர், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்சரைஸர், சீரம், க்ரீம், டே க்ரீம், நைட் க்ரீம், வின்டர் க்ரீம், சம்மர் சன்ஸ்க்ரீன் க்ரீம் என பொருட்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும்.
முகத்தை பொலிவாக வைக்க அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் இருக்கும் பொருட்கள் ஏராளம். ஃபேஸ் ஸ்க்ரப்பர், ஃபேஸ் வாஷ், ஃபேஸ் க்ளென்ஸர், டோனர், மாய்ஸ்சரைஸர், சீரம், க்ரீம், டே க்ரீம், நைட் க்ரீம், வின்டர் க்ரீம், சம்மர் சன்ஸ்க்ரீன் க்ரீம் என பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இதுதவிர ஃபேஸ் மாஸ்க்குகளும் சந்தையில் ஏராளமாக வந்துவிட்டன. ரெடிமேட் மாஸ்க், பீல் ஆஃப் மாஸ்க் என்றெல்லாம் கிடைக்கின்றன. இந்த வரிசையில் சந்தையில் புதுசு பபுள் மாஸ்க்.
பபுள் மாஸ்க் எப்படி செயல்படுகிறது?
பபுள் மாஸ்க் என்பது அந்த மாஸ்கில் உள்ள மூலக்கூறுகளால் ஏற்படும் பபுள்களால் இந்தப் பெயரைப் பெற்றுள்ளது. அதில் உள்ள அழுத்திவைக்கப்பட்ட ஆக்சிஜன் ஆனது சருமத்தை சுவாசிக்கச் செய்கிறது. அந்த மாஸ்கில் உள்ள ஆக்ஸிஜனானது கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது சருமத்தின் எலாஸ்டிசிட்டி எனப்படும் இழுவைத் தன்மையை அதிகரிக்கிறது. இது சருமம் வயதாவதைத் தடுக்கிறது. சருமம் மிருதுவாகக் காட்சியளிக்கச் செய்கிறது.
பபுள் மாஸ்கை எப்படி உபயோகப்படுத்துவது?
1. மிதமான க்ளென்ஸர் கொண்டு முகத்தை சுத்தப்படுத்துங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவுவதால் முகத்தில் உள்ள சிறு துவாரங்கள் திறந்துவிடும்.
2. நீங்கள் சந்தையிலிருந்து எந்தவிதமான ஃபேஸ் மாஸ்க் வாங்கியிருந்தாலும் சரி. அதை கொஞ்சம் தாராளமாகவே முகத்தில் பயன்படுத்துங்கள். முகத்தில் பபுள் தோன்றும்வரை அதை அப்படியே வைத்திருங்கள். க்ரீம் பேஸ்டு மாஸ்க் என்றால் அதை கண், வாய், நாசித்துவாரங்கள், முடியை ஒட்டிய ஹேர்லைன் பகுதிகளில் அப்ளை செய்யாதீர்கள்.
3. பபுள்ஸ் வர காத்திருங்கள்...
உங்கள் முகத்தில் பபுள் மாஸ்கை அப்ளை செய்த சிறிது நேரத்த்ல் பபுள்ஸ் உருவாகும்.பபுள் மாஸ்கில் முழுவதுமாக பபுள்ஸ் வரை அதிகபட்சமாக 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும். அதுவரை காத்திருந்து பபுள்ஸ் வந்தபின்னர் சுத்தம் செய்யவும். பபுள்ஸ் மாஸ்க் கொஞ்சம் ஈரத்தன்மை இருக்கும்போதே எடுத்துவிட வேண்டும். அது மொத்தமாக காயவிடக் கூடாது.
4. பபுல்ஸ் மாஸ்கை மெதுவாக அப்புறப்படுத்தவும். அது முகத்தில் உள்ள அழுக்கு, கறை ஆகியனவற்றை நீக்கியிருக்கும். மாஸ்கை வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவுவது நன்று.
5. முகத்தில் மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்யவும்
பபுள்ஸ் மாஸ்கை அப்புறப்படுத்திய பின்னர் நீங்கள் முகத்தில் மாய்ஸ்சரைஸர் பூசி முகத்தின் ஈரப்பதத்தன்மையை உறுதி செய்யவும்.
எந்தவிதமான ப்யூட்டி டிப்ஸாக இருந்தாலும், அதை முதன்முதலில் பயன்படுத்துபவராக இருந்தல் அதை உங்கள் சரும மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தேவைப்பட்டால் ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்த பின்னர் பயன்படுத்துவது நல்லது.