மேலும் அறிய

Aliv Seeds: ஆளி விதைகளால் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கோங்க.. இப்படி ஒரு மேஜிக் பலன்..

Aliv Seeds Benefits in Tamil: ஆளி விதைகள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளித்தாலும் 1 தேக்கரண்டிக்கு மேல் அதிகளவில் உட்கொள்ளக்கூடாது.

Halim Seeds Benefits: இன்றைய சூழலில் எந்தளவிற்கு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று முயற்சிக்கிறோமோ? அந்த அளவிற்கு உடலில் பல்வேறு நோய்களையும் நாம் சம்பாதிக்கிறோம் என்றுதான் கூறவேண்டும். ஆம்  நம்முடைய உடலின் மீது எந்த அக்கறையும் காட்டாமல், ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம். இனிமேலாவது சத்தான உணவுகள் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான உணவுகளை நாம் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்று இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி,ஏ மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்த ஆலிவ் விதைகளின்(Aliv Seeds) பயன்கள் என்ன? அன்றாட உணவில் இதனைச்சேர்க்கும்போது என்னவிதமான நன்மைகளை பெற முடிகிறது என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம்..

Aliv Seeds: ஆளி விதைகளால் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கோங்க.. இப்படி ஒரு மேஜிக் பலன்..

 ஆளி விதைகளை மக்கள ஒரு சூப்பர் உணவுப்பொருளாகக் கருதுகின்றனர். உடல் உடையைக்குறைப்பது தொடங்கி, ஆரோக்கியமான வாழ்க்கையை கொண்டிருக்க இதனை நாம் பயன்படுத்துகிறோம்..

இரத்தச்சோகைக்கு தீர்வு தரும் ஆளி விதைகள் | Halim Seeds for Hemoglobin:

சிறிய சிவப்பு நிறம் கொண்ட இந்த அலிவ் விதைகளில் இரும்புச்சத்து அதிகளவில் உள்ளது. இதனால் உடலில் இரத்த சிவப்பு அணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு ஹீமோகுளோபின் அளவையும் மேம்படுத்துகிறது.  இதனால் ரத்த சோகை உள்ளவர்கள் இதனைச்சரிச் செய்வதற்கு மருத்துகள் எடுத்துக்கொள்ளும் வேளையில் இந்த அலிவ் விதைகளையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் சியும் அதிகளவில் உள்ளது.

மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்திற்கு சிகிச்சை | Aliv Seeds for Constipation:

இந்த அலீவ் விதைகள் மலச்சிக்கல் மற்றும் அஜூரணக்கோளாறு போன்ற செரிமானப்பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. இதனை தவறாமல் உட்கொள்ளும் போது செரிமானப்பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் அஜீரண பிரச்சனைகளிலிருந்து நமக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதே சமயம் அதிகமாக இதனை உட்கொண்டு வயிற்றுப்பிரச்சனைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால்  உற்பத்தி அதிகரிப்பு | Halim Seeds for Lactation:

ஹலீம் அல்லது அலீவ் விதைகளில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகளவில் நிறைந்துள்ளது. மேலும்  தாய்ப்பாலை மேம்படுத்தக்கூடிய கேலக்டாகோக் பண்புகளைக்கொண்டுள்ளது. எனவே குழந்தைப்பிறப்புக்கு பிறகு இந்த விதைகளை நெய், வெல்லம், ரவை , உலர்த்த தேங்காய் மற்றும் பாதாம் போன்றவற்றால் செய்யப்பட்ட லட்டுவாகவும்  தாய்மார்களுக்கு கொடுக்கலாம் .இதனால் தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கிறது.

Aliv Seeds: ஆளி விதைகளால் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கோங்க.. இப்படி ஒரு மேஜிக் பலன்..

மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குப்படுத்தும் | Aliv Seeds for Menstruation

பெண்களுக்கு வழக்கமான மாதவிடாய் சுழற்சிதான் அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. ஆனால் தற்போது பல பெண்கள் முறையற்ற மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இந்நிலையில் தான் இதனைக் குணப்படுத்துவதற்கு ஆளி விதைகளை உட்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைப் பின்பற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. எனவே இந்த விதைகளை உட்கொள்ளும்போது ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துவதோடு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்குகிறது.

Aliv Seeds: ஆளி விதைகளால் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கோங்க.. இப்படி ஒரு மேஜிக் பலன்..

உடல் எடைக்குறைக்க உதவுகிறது | Weight Loss:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பல வழிகளில் முயற்சிப்பவர்கள் இந்த ஆளி விதைகளை கொஞ்சம் பயன்படுத்திப்பார்க்கலாம். இதில் புரதம் மற்றும் ஃபைபர் சத்துக்கள் உள்ளதால் பசி அதிகளவில் ஏற்படுவது மட்டுமில்லாமல், அதிகப்படியான உ ணவு உட்கொள்வதைத் தவிர்க்க உதவுகிறது. எனவே உடல் தசைகளைப் பராமரிக்கவும், ஆரோக்கிய முறையில் உடல் எடைக்குறைக்கவும் உதவியாக உள்ளது.

இதோடு இந்த விதைகளில் நுரையீரல் செயல்பாடுகளை மேம்படுத்த உதவும் சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை நாம் உட்கொள்ளும்போது ஆஸ்துமாவின் அறிகுறிகளிலேயே அதற்கு நிவாரணம் தருகிறது. மேலும் இருமல், தொண்டை புண் போன்றவற்றுக்கும் நல்ல சிகிச்சையளிப்பதாக உள்ளது. எனவே குளிர், மழைக்காலம் போன்ற பருவகால மாற்றங்களின்போது இதனை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள முயலவேண்டும்.

Aliv Seeds: ஆளி விதைகளால் இவ்வளவு நன்மைகளா? தினமும் எடுத்துக்கோங்க.. இப்படி ஒரு மேஜிக் பலன்..

இந்த விதைகள் பல்வேறு நன்மைகளை நமக்கு அளித்தாலும் அதிகளவில் உட்கொள்ளக்கூடாது. 1 தேக்கரண்டி விதைகளுக்கு மேல் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது எனவும் வாரத்தில் 3 முதல் 4 முறை இதனை வழக்கமாக நாம் சேர்த்துக்கொள்ளலாம். ஆளி லட்டு, ஆளி சூப் போன்ற பலவழிகளில் இதனை நாம் நம்முடைய ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தலாம்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget