Weight Loss : என்ன செஞ்சாலும் உடல் எடை குறையாம இருக்கா? இந்த விஷயங்களை கவனிச்சா போதும்..
வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்தால் நிச்சயம் உடல் எடையை குறைக்கலாம்.
பொதுவாக இந்தியர்கள் சராசரியான உடல்வாகு கொண்டவர்கள் ஆனால் கடந்த 20 வருடங்களாக இந்த நிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடல் பருமன் மரபு ரீதியாக வருவது ஒருபுறம் என்றால் பசி இல்லாமல் உண்பது, உண்ட உணவுக்கு ஏற்ற அளவு வேலை செய்யாமல் இருப்பது, தவறான உணவுகளை உண்பது என பல வகைகளிலும் இன்று மனித குலத்திற்கு பெரும் சவாலாக இருக்கிறது.
இது மட்டுமல்லாது போதிய உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது சமச்சீர் உணவுகள் இல்லாமல் நிறைய நொறுக்கு தீனிகளை தின்பது என்று நிறைய காரணங்களை கூறிக் கொண்டே போகலாம். இந்த உடல் பருமனால் சுறுசுறுப்பு இல்லாமல் ஒரு விதமான சோம்பல்,உடலில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பின் காரணமாக மாரடைப்பு மற்றும் எந்த வேலையை செய்தாலும்,உடனடியாக மூச்சுளைப்பு மற்றும் சோர்வு என இதனால் ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம்
மறுபுறம் உடல் பருமனாக இருப்பதினால் ஒரு விதமான தாழ்வு மனப்பான்மையும் மற்றவர்களின் கேலி கிண்டலும் என உடல் பருமன் ஏற்படுத்துகின்ற தொல்லைகள் ஏராளம். அதேபோல் இன்று உடல் பருமன் காரணமாக சில திருமணமான பெண்களுக்கு குழந்தை பிறப்பது என்பது கடினமாகவே இருக்கிறது. உடல் பருமனால் கர்ப்பப்பை மற்றும் பி சி ஓ டி எனப்படும் அந்த கட்டி வகைகளும் அதிக அளவில் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இன்று 20 வயதிற்குட்பட்ட இருபாலரும் அதிகளவில் இந்த உடல் பருமன் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் இதற்கு ஆக முக்கிய காரணம் அவர்களுடைய தவறான உணவு பழக்க வழக்கங்களும் மற்றும் உடற்பயிற்சி இன்மை ஆகும். இன்று குழந்தை பருவமாகட்டும் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர் பருவமாகட்டும் ஓடி ஆடி விளையாடுவது குறைந்து கைபேசியை கதியென்று இருக்கும் பொழுதும் இந்த உடற்பெருமன் பிரச்சினை அதிகரிக்கிறது இதை போலவே வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியலில் சீரியல்களை அதிகம் பார்க்கும் பெண்களும் இந்த உடல் பருமனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்
மரபு ரீதியாக வரும் உடல் பருமனையே உடற்பயிற்சியின் மூலம் குறைத்து வெற்றி காண முடியும் எனும் பொழுது தவறான உணவு பழக்க வழக்கத்தினால் வரும் உடல் பருமனை கவனத்தில் கொண்டு தகுந்த உடற்பயிற்சி எடுத்துக் கொள்ளும் பொழுது இந்த உடற்பருமன் தொல்லையிலிருந்து விடுபடலாம். பசி எடுத்து உண்பது நொறுக்கு தீனிகளையும் எண்ணெயிலான பலகாரங்களையும் தவிர்ப்பது தினமும் ஒரு மணி நேரம் தீவிர நடை பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி அல்லது மிதிவண்டி பயிற்சி அல்லது வேறு ஏதேனும் ஒரு விளையாட்டு என்று ஈடுபடுத்திக் கொள்ளும் பொழுது உடல் பருமனில் இருந்து முற்றிலுமாக வெளிவரலாம்