உங்கள் செல்ல நாய்க்கு ட்ரீட் கொடுக்கணுமா.. வெள்ளரி முதல் ஸ்ட்ராபெர்ரி வரை: லிஸ்ட் இதோ!
பொதுவாக சாப்பாடு தவிர, நாம் கொடுக்கும் சின்ன சின்ன தின்பண்டங்கள் நாய்களின் உணவில் பத்து சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும்.
நமது நாய்க்குட்டிகளை நமக்கு எவ்வளவு பிடிக்கும்? அளவுக்கு அதிகமாக அல்லவா, ஆனால் நமது நாயின் நலன் குறித்து நமக்கு எவ்வளவு தெரியும்? பொதுவாக சாப்பாடு தவிர, நாம் கொடுக்கும் சின்ன சின்ன தின்பண்டங்கள் நாய்களின் உணவில் பத்து சதவிகிதம் மட்டுமே இருக்க வேண்டும். அந்த தின்பண்டங்களும் நாயின் உடல்நலனுக்கு நல்ல உணவுகளாக அமைந்தால், அது அவற்றின் நீண்ட கால ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும். அடுத்த முறை அவற்றுக்கு பயிற்சி கொடுக்கும்போதோ, வெளியில் நடக்கக் கூட்டிப் போகும்போதோ அவற்றுக்கு உண்ணக் கொடுக்க இந்த தின்பண்டங்களைப் பயன்படுத்துங்கள்.
- பெர்ரி பழங்கள்
நாய்களுக்கு பழங்கள் கொடுக்கலாமா? நிச்சயமாக. பெர்ரி பழங்கள் புளிப்பு சுவையுள்ள நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள். மேலும் இவற்றில் கலோரி அளவும் மிகவும் குறைவு, உயிர்ச் சத்துகள் நிரம்பி இருக்கின்றன. ஒரே ஒரு விஷயம், பெட்டியில் அடைத்து வைத்து விற்கப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இனிப்பு ஏற்றப்பட்டிருக்கும், அந்த அதிகப்படுத்தப்பட்ட இனிப்பற்ற இயற்கையான பெர்ரி பழங்கள் உங்களுக்கு கிடைக்குமாயின், தாராளமாக அவற்றை உங்கள் நாய்க்கு நீங்கள் உண்ணக் கொடுக்கலாம்.
- மாம்பழம்
வைட்டமின்களும், ஆல்ஃபா/பீட்டா கரோட்டினும் நிறைந்திருக்கும் பழம் இது. விதையை நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக வெட்டி உங்கள் செல்ல பிராணிக்கு நீங்கள் இந்த பழத்தைத் தரலாம்.
- வெள்ளரி
வெயில் காலத்தில் உங்கள் நாயின் நீர்ச்சத்தைப் பராமரிக்க வெள்ளரி ஒரு அற்புதமான உணவு. மேலும், எந்த மாவுச் சத்தும் இல்லாத மக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்தும் நிரம்பிய உணவு, தோலை நீக்கிவிட்டு, இரு முனைகளையும் வெட்டிவிட்டு, இந்த பழத்தை உங்கள் செல்ல பிராணிக்கு நீங்கள் கொடுக்கலாம்.
- தேன்
எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் உணவு இது. ஆனால் மிகச் சிறிய அளவில் தான் இதைக் கொடுக்க வேண்டும். சந்தையில் கிடைக்கும் அதிகம் இனிப்பு ஏற்றப்பட்ட தேனைத் தவிர்க்க வேண்டும். வீக்கம், அல்சர் போன்ற தொந்தரவுகளுக்கு தேன் அருமருந்து. ஆயினும், கால்நடை மருத்துவரிடம் உங்கள் நாய்க்கு தேன் வழங்கலாமா என்பதைப் பரிசீலித்து விட்டு தருவது நல்லது.
- நிலக்கடலை வெண்ணெய்
உப்பிடாத, இனிப்பிடாத நிலக்கடலை வெண்ணெய்யாக இருப்பின், அது மாதிரியான ஒரு சுவையான ஆரோக்கியமான உணவு வேறெதுவும் இல்லை. புரதச் சத்து, வைட்டமின்கள், நலன் பயக்கும் கொழுப்புச் சத்து போன்றவை நிரம்பியிருக்கிறது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்