புருவ முடி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளர்வதற்கு டிப்ஸ்!
புருவ முடி தான் அடர்த்தியாக கருப்பாக இருந்தால் தான் அழகு என்று நினைத்து கொண்டு இருக்கும் பலருக்கு முடி வளர்வதே இல்லை. அதை பற்றி பெரியதாக கண்டு கொள்ளாதவர்களுக்கு முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.
புருவ முடி தான் அடர்த்தியாக கருப்பாக இருந்தால் தான் அழகு என்று நினைத்து கொண்டு இருக்கும் பலருக்கு முடி வளர்வதே இல்லை. அதை பற்றி பெரியதாக கண்டு கொள்ளாதவர்களுக்கு முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். புருவ முடி வளர்ச்சிக்கு சில டிப்ஸ் இதோ.
புருவ முடி எதனால் உதிர்ந்து விடுகிறது ?
புருவ முடி உதிர்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. அலோபீசியா அரேட்டா ஹார்மோன் ஏற்ற தாழ்வுகள் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் புருவ முடி உதிரும். மேலும் கீமோதெரபி சிகிச்சையில் இருப்பவர்களுக்கு புருவ முடி உதிரும்.
புருவ முடி மீண்டும் வளருமா?
புருவ முடி முழுமையாக மழித்து எடுத்தாலும், ஆறு மாதத்தில் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும்.
முடி வளர்ச்சி மூன்று கட்டங்களில் நடக்கிறது.
அனஜென் - வளரும் கட்டம்,
கேட்டஜன், வளர்ந்த முடிகள் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இடைப்பட்ட காலம்.
டெலோஜென் - ஓய்வெடுக்கும். மற்றும் முடி உதிரும் கட்டம்
ஒரு நாளைக்கு 0. 14 மி.மீ முதல் 0.16 மி.மீ வரை முடி வளரும்.
முடி வளர்ச்சிக்கு
ஊட்டச்சத்து மிக்க உணவுகள் - சமசீரான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிறைந்த விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும். முடி வளர்ச்சிக்கு தேவையான புரத சத்து உணவுகள் எடுத்து கொள்ள வேண்டும்.
இரும்பு சத்து மிக்க உணவுகள் - கீரை, பேரிச்சம் பழம், அத்தி பழம் , கீரைகள் ஆகியவை எடுத்து கொள்ள வேண்டும். இரும்பு சத்து குறைவாக இருந்தாலும் முடி உதிரும்.
பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் மருத்துவ ஆலோசனைக்கு பிறகு எடுத்து கொள்ள வேண்டும். பயோட்டின் சத்து நிறைந்த உணவுகளான இறைச்சிகள், கொட்டைகள் மற்றும் முழு தானியங்கள் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும்.
விளக்கெண்ணெய் - புருவத்தில் விளக்கெண்ணெய் தடவுவது, முடி வளர்ச்சிக்கு உதவும். இது பாரம்பரியமாக பயன்படுத்த படுகிறது. இதில் இருக்கும் ரிசினொலிக் அமிலம் முடி வளர்ச்சிக்கு உதவும்.
புருவத்திற்கு சீரம் - புருவத்திற்கு சீரம் தடவுதன் மூலம், முடி அடர்த்தியாக வளர உதவும். புருவத்திற்கு என்று தனியாக சீரம் கடைகளில் கிடைக்கும்.
புருவத்தை திருத்தல் - முடி வளர்ச்சி போதுமாக இல்லை என்றால் ட்ரிம் செய்யுதல், நூலால் வெளியேற்றுதல் போன்றவற்றை செய்ய கூடாது. இது மேலும் முடி உதிர்வதற்கு காரணமாக அமைந்து விடும்.
இது போன்றவற்றை செய்வதால் முடி வளர்ச்சி அடர்த்தியாகவும், கருப்பாகவும் வளரும். முடி வளரவில்லை என்ற கவலை வேண்டாம்.